பிறந்தநாளில் இலவச மருத்துவ முகாமை தொடங்கி வைத்து கமல்ஹாசன் பேச்சு

நடிகர் கமல்ஹாசனின் 62-வது பிறந்தநாளான இன்று மருத்துவ முகாமை தொடங்கிய கமல்ஹாசன் மக்கள் மத்தியில் உரையாற்றினார்.
பிறந்தநாளில் இலவச மருத்துவ முகாமை தொடங்கி வைத்து கமல்ஹாசன் பேச்சு
Published on

அதில் அவர் கூறியிருந்தததாவத, நாளை என்பது மற்றொரு நாளே. வேலை கிடக்குது ஆயிரம் இங்கே. கோலையுங்குடியையும் உயரச் செய்வோம். வேளை வரும் என காத்திருக்காது காலையிலேயே புதுயுகம் செய்வோம் என பதிவிட்டிருந்தார்.

இந்நிலையில், திருவள்ளூர் மாவட்டம் ஆவடியில் மருத்துவ முகாமை தொடங்கி வைத்தார். அவருடன் அவரது இளைய மகள் அக்‌ஷரா ஹாசனும் பங்கேற்றிருந்தார். அப்போது பேசிய கமல்,

மழை நேரங்களில் தொற்று பரவ வாய்ப்பு இருப்பதால் மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும். ஆங்காங்கே தேங்கியிருக்கும் மழைநீரை அரசு அகற்றிவருவதால் மருத்துவ முகாமை நடத்துவதாக கமல் தெரிவித்துள்ளார். மருத்துவ முகமாமை மக்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இந்த முகமாமுக்கும் அரசியலுக்கு எந்த தொடர்பும் இல்லை.

எங்களது அரசியல் பணிகள் அமைதியாக நடந்து கொண்டிருக்கிறது. கனவுகளில் இருந்து தான் கண்டுபிடிப்புகள் உருவாகின்றன. எனவே எங்களுடைய முயற்சிகள் வலுப்பெறும் என்ற நம்பிக்கை உள்ளது.

அதனைத் தொடர்ந்து பள்ளிக்கரணையில் மழைபாதித்த பகுதிகளை பார்வையிடும் கமல், மக்களிடம் குறைகளை கேட்டறிகிறார். பின்னர் சென்னை தியாகராய நகரில் உள்ள விடுதியில் செய்தியாளர்களை சந்திக்கும் கமல்ஹாசன் தனது எதிர்கால திட்டங்கள் குறித்த அறிவிப்பை வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com