எது வந்தாலும் எதிர்த்து அரசியல் செய்வேன் - கமல்ஹாசன் பேட்டி

எது வந்தாலும் எதிர்த்து அரசியல் செய்வேன் என்று கூறிய கமல்ஹாசன் உள்ளாட்சி தேர்தல் பற்றி பின்னர் முடிவு செய்வதாக கூறினார். #KamalHaasan #KamalHaasanPoliticalEntry #NaalaiNamthe
எது வந்தாலும் எதிர்த்து அரசியல் செய்வேன் - கமல்ஹாசன் பேட்டி
Published on

நடிகர் கமல்ஹாசன் சென்னை விமான நிலையத்தில் இன்று பேட்டி அளித்தார். அப்போது கேட்கப்பட்ட கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும் கூறியதாவது:-

கேள்வி:- உங்கள் சுற்றுப் பயணத்துக்கு ‘நாளை நமதே’ என்று பெயர் வைத்தது ஏன்?

கமல்ஹாசன்:- நான் மக்களை சந்திக்கும் சுற்றுப் பயணத்துக்கு ஒரு பெயர் வேண்டும் என்று கேட்டார்கள். அப்போது எனக்கு முதலில் யோசிக்காமல் வந்த பெயர் நாளை நமதே என்பதுதான். அது எம்.ஜி.ஆர். பட தலைப்பு என்கிறார்கள். அதில் என்ன தப்பு? அவருக்கும் இந்த கனவு இருந்தது. நல்ல ஞாபகங்கள்தான் வருகிறது. இதை சொல்லும்போது அதனால்தான் இந்த பெயர்.

கே: பஸ் கட்டண உயர்வு, பெட்ரோல், டீசல் விலை உயர்வு சாதாரண மக்களை பாதிக்கப்பட்டது குறித்து டுவிட்டரில் கூறி இருந்தீர்கள்... அதுபற்றி!

ப:- சாதாரண மக்கள் பாதிக்கப்படுவது உண்மை. இதற்கு தீர்வு சொல்லவில்லை என்கிறார்கள். சில தீர்வுகளை சொல்ல முடியாது, செய்து தான் காட்ட வேண்டும். நீங்கள் எப்போது வந்து எப்போது செய்வது என்றால் பக்கத்து மாநிலங்களை பாருங்கள். சில தீர்வுகளை அவர்கள் எப்படி சமாளித்து தமிழர்கள் என்பதற்கு எல்லா முன்உதாரணங்களும் இருக்கின்றன.

கே:- காஞ்சி மட இளைய சங்கராச்சியார் விஜயேந்திரர் தமிழ்தாய் வாழ்த்து பாடும்போது மரியாதை கொடுக்காமல் தியானத்தில் இருந்தார். தேசியகீதம் பாடும்போது மட்டும் எழுந்து நின்றார். இதன்மூலம் தமிழ்த்தாயை அவமதித்துவிட்டார் என்று சர்ச்சை எழுந்துள்ளதே?

ப:- இதற்காகத்தான் ஏற்கனவே நான் சொன்னேன். கண்ட கண்ட இடத்தில் எல்லாம் தமிழ்த்தாய் பாடலை போடக்கூடாது என்று. ஏனென்றால் எல்லோரும் ஒரே மாதிரி இருக்க மாட்டார்கள். போட வேண்டிய சரியான இடத்தில்தான் போட வேண்டும். சினிமா தியேட்டரில் கூட தேசியகீதம் போடுவதும் இதுபோன்ற நிகழ்வு ஏற்படலாம் என்று தான் இதை சொன்னேன்.

கே:- இதற்கு காஞ்சி மடம் தியானம் செய்ததாக விளக்கம் அளித்திருப்பது பற்றி?

ப:- ஊழல் நடந்தபோது கூட மக்கள் தியானத்தில் இருந்து விட்டார்கள். அதனால் தான் கண்டு கொள்ளாமல் இருந்துவிட்டார்கள்.

அதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. தியானத்தில் இருப்பது அவர் கடமை. எழுந்து நிற்க வேண்டியது நமது கடமை.

கே:- பஸ் கட்டண உயர்வு தவிர்க்க முடியாதது என்று அரசு சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளதே?

ப:- நானும் பாமரனாக இருந்து சொல்கிறேன். இந்த அரசு போக்குவரத்து லாபத்தில்தான் நடக்க வேண்டும் என்று யார் சொன்னார்கள்? லாபத்தை மட்டும் ஈட்டும் துறையாக இருக்க கூடாது. சில துறைகள் ஏழைகளுக்கு உதவும் துறைகளாக இருக்க வேண்டும். அது நல்ல அரசு செய்ய வேண்டிய கடமை. தனியார் பஸ் வைத்திருப்பவர்கள்தான் அரசு பஸ் ஓட கூடாது என்று நினைப்பார்கள். அதை பிறகு பேசலாம்.

கே:- உள்ளாட்சி தேர்தலில் உங்கள் கட்சி போட்டியிடுமா?

ப:- முதலில் எங்கள் கட்சியை பதிவு செய்ய வேண்டும். அது பிப்ரவரி 21-ந் தேதி தான் நடக்கும். அதன் பிறகு எங்களுக்குள் இருக்கும் கூட்டமைப்பில் பேசிதான் முடிவு செய்ய முடியும். இப்போது நான் எதுவும் சொல்ல முடியாது. அது தனிமனித முடிவாகும்.

கே:- உங்கள் அரசியல் தமிழக அரசியலை நோக்கி இருக்குமா? தேசிய அரசியலை நோக்கி இருக்குமா?

ப:- தமிழக அரசியலையும் நோக்கி இருக்கும். ஆனால் அதுதான் முக்கியம். எனது வீட்டை முதலில் சுத்தப்படுத்த வேண்டும். என் வீட்டு வேலைக்காரனாக இருப்பதுதான் முதலில் எனக்கு பெருமை.

கே:- உங்கள் அரசியலும் ரஜினியின் ஆன்மீக அரசியலும் ஒரே திசையை நோக்கி பயணிக்குமா அல்லது வேறு வேறு திசையில் பயணிக்குமா?

ப:- திசை ஒன்றுதான்... மக்களின் சேவை என்பது. ஒவ்வொருவரும் ஒவ்வொரு மாதிரி சொல்வார்கள். அதற்கு எனக்கு ஒப்புதல் உண்டா? எங்களுடைய கடமைகளுக்கு கோட்பாடுகளுக்கு இடையூறு இல்லாமல் இருக்குமா என்பதை கண்டிப்பாக கவனித்தே ஆக வேண்டும்.

கே:- பெரியார் மண்ணில் ஆன்மீக அரசியல் சாத்தியப்படுமா?

ப:- நான் நினைப்பது மக்களின் நலன் பற்றி மட்டும் தான். மக்களின் நன்மைக்காக எந்த கொள்கையையும் ஏற்பேன். மக்களில் சாமி கும்பிடுபவர்களும் இருக்கிறார்கள். கும்பிடாதவர்களும் இருக்கிறார்கள். பெரியாருக்கு விபூதி, பிரசாதம் கொடுத்த போது அன்பாக ஏற்றார். ஆனால் அவர் சாமியை நம்பவில்லை.

ப:- பல திட்டங்கள் உள்ளன. ஒரு கிராமத்தை நாங்கள் தத்து எடுக்கிறோம். இயன்றதை செய்ய வேண்டும் என்பதால், ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பது போல் ஒரு கிராமத்தை தத்து எடுக்கிறோம். மக்களுக்கு அத்தியாவசிய தேவை என்ன என்பதை சுட்டிக் காட்டுவது கடமை. அதை செய்வது பெருமை.

ப:- அவர்கள் 37 வருடமாக சந்தோ‌ஷமாக இருக்கிறார்கள். நாளுக்கு நாள் அந்த எண்ணிக்கை அதிகமாகிக் கொண்டே இருக்கிறது. அதற்கான ஏற்பாடுகளும் நடக்கிறது.

கே:- அரசியல் பிரவேசத்தில் யாரை எதிர்ப்பீர்கள்?

ப:- யாரை வேண்டுமானாலும் எதிர்ப்போம். கட்டுவதுதான் எங்கள் வேலை. இடிப்பது அல்ல.

இவ்வாறு கமல் கூறினார். #KamalHaasan #KamalHaasanPoliticalEntry #NaalaiNamthe

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com