பூஜையுடன் அடுத்த படத்தை துவங்கிய அரவிந்த்சாமி

ராஜபாண்டி இயக்கத்தில் அரவிந்த்சாமி - ரெஜினா இணைந்து நடிக்கும் கள்ளபார்ட் படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் இன்று துவங்கியது. #Kallapart #ArvindSwamy
பூஜையுடன் அடுத்த படத்தை துவங்கிய அரவிந்த்சாமி
Published on

விக்ரமின் `ஸ்கெட்ச்' படத்தை தயாரித்த மூவிங் பிரேம் நிறுவனம் அடுத்ததாக அரவிந்த்சாமி நாயகனாக நடிக்கும் `கள்ளபார்ட்' படத்தை பிரம்மாண்டமாக தயாரிக்கிறது.

`என்னமோ நடக்குது', `அச்சமின்றி' படங்களை இயக்கிய ராஜபாண்டி இந்த படத்தை இயக்குகிறார். வித்தியாசமான கதையம்சம் கொண்ட இந்தப் படத்தில் நாயகியாக ரெஜினா நடிக்கிறார். முக்கிய வேடத்தில் ஆனந்த்ராஜ் நடிக்கிறார். படத்தில் இடம்பெறும் மற்ற நட்சத்திரங்கள் தேர்வு நடைபெற்று வருகிறது. 

நிவாஸ் கே.பிரசன்னா இசையமைக்கும் இந்த படத்திற்கு அரவிந்த் கிருஷ்ணா ஒளிப்பதிவு பணிகளை மேற்கொள்கிறார். இந்த படத்திற்காக ஏ.வி.எம் ஸ்டுடியோவில் அரங்குகள் அமைக்கப்பட்டு இன்று பூஜையுடன் படப்பிடிப்பு துவங்கியது. தொடர்ந்து முப்பது நாட்கள் சென்னையில் படப்பிடிப்பு நடைபெற உள்ளது.

இன்று நடைபெற்ற படத்தின் பூஜையில் பா.ரங்கநாதன் எம்.எல்.ஏ, தொழிலதிபர்கள் எஸ்.செல்வம், சிவசங்கர், பொன்வண்ணன், சரண்யா பொன்வண்ணன், இயக்குனர்கள் விஜய் சந்தர், ஜெயபிரகாஷ், பெப்ஸி தலைவர் ஆர்.கே.செல்வமணி, குட்டிபத்மினி ஆகியோர் கலந்து கொண்டனர். #Kallapart #ArvindSwamy #ReginaCassandra

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com