அடுத்த கட்டத்தில் `கலகலப்பு-2'

சுந்தர்.சி இயக்கத்தில் விறுவிறுப்பாக உருவாகி வரும் `கலகலப்பு'படத்தின் இரண்டாவது பாகம் தற்போது அடுத்த கட்டத்திற்கு நகர்ந்துள்ளது.
அடுத்த கட்டத்தில் `கலகலப்பு-2'
Published on

அவ்னி சினி மேக்ஸ் சார்பில் குஷ்பு சுந்தர் தயாரிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு அக்டோபர் 4-ஆம் தேதி படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு காரைக்குடியில் துவங்கி தொடர்ந்து 15 நாட்களுக்கு நடைபெற்று வந்தது.

இந்நிலையில், படத்தின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு காசியில் இன்று தொடங்கியுள்ளது. அதனைத் தொடர்ந்து இந்தூர், புனே மற்றும் ஐதராபாத் உள்ளிட்ட இடங்களில் நடைபெற இருக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு வருகிற டிசம்பர் இரண்டாம் வாரத்தில் நிறைவடையும் என படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

`கலகலப்பு-2' ஆம் பாகத்தில் ஜீவா, ஜெய், மிர்ச்சி சிவா, கேத்ரின் தெரசா, நிக்கி கல்ராணி முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இவர்களுடன் ராதா ரவி, வி.டி.வி கணேஷ், யோகி பாபு, ரோபோ சங்கர், மனோபாலா, சிங்கம் புலி, வையாபுரி, சந்தான பாரதி, அனு மோகன் உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர்.

2012 ஆம் ஆண்டு சுந்தர்.சி. இயக்கத்தில் வெளியான `கலகலப்பு' படத்தின் அடுத்த பாகமாக உருவாகி வருவதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இப்படத்திற்கு ஹிப் ஹாப் தமிழா ஆதி இசையமைக்கிறார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com