நாளை முதல் காதலிக்காதே சொல்லும் அதர்வா

அதர்வா நடிப்பில் உருவாகி வரும் ‘இமைக்கா நொடிகள்’ படத்தில் ராஷி கண்ணாவிடம் நாளை முதல் ‘காதலிக்காதே...’ என்று சொல்ல இருக்கிறார்.
நாளை முதல் காதலிக்காதே சொல்லும் அதர்வா
Published on
அதர்வா தற்போது ‘செம போத ஆகாத’, ‘ருக்மணி வண்டி வருது’, ‘இமைக்கா நொடிகள்’, ஒத்தைக்கு ஒத்த’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இதில் ‘இமைக்கா நொடிகள்’ படத்தை அஜய் ஞானமுத்து இயக்கி வருக்கிறார். அதர்வாவுடன் இப்படத்தில் நயன்தாரா, ராஷி கண்ணா, அனுராக் காஷ்யப் உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள்.

ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு ஹிப் ஹாப் தமிழா ஆதி இசையமைத்து வருகிறார். கேமியோ பிலிம்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரித்து வருகிறது. இப்படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் டீசர் மே மாதம் வெளியிடப்பட்டது. இது ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது.

தற்போது இப்படத்தின் ‘காதலிக்காதே...’ என்ற பாடலை நாளை வெளியிட இருப்பதாக படக்குழுவினர் அறிவித்திருக்கின்றனர். பர்ஸ்ட் லுக் மற்றும் டீசர் போல் ‘காதலிக்காதே...’ பாடலும் ரசிகர்களை கவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
X

Maalai Malar
www.maalaimalar.com