பேய்க்கு பயந்த கே.பாக்யராஜ்

பிரபல இயக்குனரான கே.பாக்யராஜ், சின்ன வயதில் பேய்க்கு பயந்ததாக ‘ஆறாம் திணை’ படத்தின் விழாவில் கூறியிருக்கிறார்.
பேய்க்கு பயந்த கே.பாக்யராஜ்
Published on

அருண் சி இயக்கத்தில் மொட்ட ராஜேந்திரன், வைஷாலினி நடிக்கும் படம் ‘ஆறாம் திணை’. இதன் பாடல்கள் வெளியீட்டு விழாவில் இயக்குனர் கே.பாக்யராஜ் பேசும்போது....

“பேய் இருக்கா, இல்லையான்னு இன்று வரை எல்லோரிடமும் ஒரு கேள்வி இருந்து கொண்டே இருக்கிறது. சின்ன வயதில் நான் கூட பேய் இருக்கும்னு நினைச்சு பயந்து பத்தடி தூரத்துல இருக்கிற என்னோட வீட்டுக்கு ஒரு பர்லாங் தூரம் சுத்தி நடந்து வந்திருக்கிறேன்.

அப்புறம் போகப்போகத்தான் பேய் இல்லைன்னு எனக்கு தெளிவாச்சு. காரணம் ஒரு சிம்பிள் லாஜிக். இப்ப யாராலோ கொல்லப்பட்டு பேயா மாறுகிறவங்களுக்கு தங்களை கொன்னது யாருன்னு தெரியும். அப்புறம் போலீஸ், கோர்ட் இதுக்கெல்லாம் வேலையே இருக்காதே. அப்படி ஏன் கொல்றது இல்லை” என்றார்.

விழாவில் இயக்குனர் அருண்.சி பேசும்போது, “பேய் படங்களில் கண்டிப்பாக ஒருவர் ஏன் பேய் ஆனார் என்பதற்கான பிளாஷ்பேக் காட்சி இருக்கும். ஆனால் இந்த படத்தில் அப்படி கிடையாது. காரணத்தை ரசிகர்களே புரிந்து கொள்வார்கள். பேயை விரட்டி, விரட்டி காதலிக்கும் நகைச்சுவையான கேரக்டரில் மொட்ட ராஜேந்திரன் வருகிறார்” என்றார்.

X

Maalai Malar
www.maalaimalar.com