தாய்லாந்து படப்பிடிப்பை முடித்த ஜீவா

டான் சாண்டி இயக்கத்தில் ஜீவா நடிப்பில் உருவாகி வரும் `கொரில்லா' படத்தின் இரண்டாவது கட்ட படப்பிடிப்புக்காக தாய்லாந்து சென்ற படக்குழு அங்கு படப்பிடிப்பை முடித்து விட்டு இந்தியா திரும்புகிறது.
தாய்லாந்து படப்பிடிப்பை முடித்த ஜீவா
Published on

ஆல் இன் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் உருவாகி வரும் படம் ‘கொரில்லா’. இதில் நடிகர் ஜீவா, ஷாலினி பாண்டே, ராதாரவி, சதீஷ், முனீஸ்காந்த் யோகி பாபு, மொட்டை ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். 

பாண்டிச்சேரியில் முதற்கட்ட படப்பிடிப்பு நடத்ப்பட்ட நிலையில், அடுத்த கட்ட படப்பிடிப்புக்கா படக்குழு தாய்லாந்து சென்றிருந்தது. அங்கு ஒரு மாதம் வரை படப்பிடிப்பு நடத்தப்பட்ட நிலையில், இரண்டாவது கட்ட ப்பிடிப்பு முடிந்துவிட்டதாக நடிகர் ஜீவா அவரது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். ஏப்ரல் மாதத்திற்குள் முழு படப்பிடிப்பையும் முடிக்க படக்குழு திட்டமிட்டிருக்கிறது. தாய்லாந்தில் `காங்' சிம்பன்சி குரங்குடன் படப்பிடிப்பு நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

இந்த படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம், எழுதி, இயக்குகிறார் டான் சாண்டி. ‘விக்ரம் வேதா’ புகழ் சாம்.சி.எஸ் இந்த படத்திற்கு இசையமைக்கிறார். ரூபன் படத்தொகுப்பைக் கவனிக்கிறார். வெற்றி மகேந்திரன் ஒளிப்பதிவு செய்கிறார். 

கோடை விடுமுறையில் படத்தை ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது. 

X

Maalai Malar
www.maalaimalar.com