தந்தையாக பெருமைப்பட்ட ஜெயம் ரவி

மகன் ஆரவ் மூலம் ஒரு தந்தையாக பெருமைப் படுகிறேன் என்று நடிகர் ஜெயம் ரவி கூறியிருக்கிறார்.
தந்தையாக பெருமைப்பட்ட ஜெயம் ரவி
Published on

ஜெயம் ரவி நடிப்பில் தற்போது உருவாகி வரும் படம் `டிக் டிக் டிக்'. சக்தி சவுந்தர் ராஜன் இயக்கத்தில் இந்தியாவின் முதல் விண்வெளி படமாக உருவாகியிருக்கும் இந்த படத்தில் ஜெயம் ரவி ஜோடியாக நிவேதா பெத்துராஜ் நடிக்கிறார். ஆரோன் ஆசிஸ் வில்லனாக நடித்திருக்கிறார். மேலும் ஜெயப்பிரகாஷ், ரமேஷ் திலக், வின்சென்ட் அசோகன், அர்ஜுனன், ஜெயம் ரவி மகன் ஆரவ் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள். 

இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. டீசர் வெளியானது முதல் படத்தின் மீதான எதிர்பார்ப்பும் கூடியிருக்கிறது. குடியரசு தினத்தை முன்னிட்டு வருகிற ஜனவரி 26-ஆம் தேதி படம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது படத்தின் டப்பிங் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஜெயம் ரவி மற்றும் நிவேதா பெத்துராஜ் டப்பிங்குக்காக தங்களது குரல்களை பதிவு செய்துள்ளனர்.

இந்நிலையில் ஜெயம் ரவியின் மகன் ஆரவ், தனது டப்பிங் பணியை முடித்துள்ளார். தன்னுடைய மகன் முதல் முறையாக டப்பிங் கொடுத்தது பற்றி ஜெயம் ரவி கூறுகையில், ‘தந்தையாக மிகவும் பெருமைப்படுகிறேன். இதற்கு காரணமான சக்தி சவுந்தர் ராஜனுக்கு மிகவும் நன்றி என்று கூறியுள்ளார்.

நேமிசந்த் ஜபக் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் நேமிசந்த் ஜபக் மற்றும் ஹதேஷ் ஜபக் தயாரித்திருக்கும் இந்த படத்தை ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் வெளியிடுகிறது. 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com