நிதின் சத்யா தயாரிப்பில் நடிக்கும் ஜெய்

வெங்கட் பிரபுவிடம் பணியாற்றிய பிச்சுமணி இயக்கத்தில் ஜெய் நடித்து வரும் புதிய படத்தை அவரது நண்பரான நிதின் சத்யா தயாரித்து வருகிறார்.
நிதின் சத்யா தயாரிப்பில் நடிக்கும் ஜெய்
Published on

பல படங்களில் நடிகராக பார்க்கப்பட்ட நிதின் சத்யா, இந்த படத்தின் மூலம் தயாரிப்பாளராக புதிய அவதாரம் எடுத்துள்ளார். வெங்கட் பிரபுவிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய பிச்சுமணி இயக்கி வரும் அந்த படத்தில் ஜெய் கதாநாயகனாக நடித்து வருகிறார். மலையாள நடிகை ரெபா மோனிகா ஜான் இப்படத்தின் மூலம் நாயகியாக தமிழில் அறிமுகமாகிறார் என்று கூறப்படுகிறது.  இப்படத்தை நிதின் சத்யாவின் 'SHVEDH' நிறுவனத்துடன் அவரது நண்பர் பத்ரி கஸ்துரியும் இணைந்து தயாரித்துள்ளார்.

இது குறித்து நிதின் சத்யா பேசுகையில்,

''தயாரிப்பாளராக வேண்டும் என்ற கனவு எனக்கு எப்பொழுதுமே இருந்தது. அதற்கான நல்ல கதையை தேடிக்கொண்டிருந்தேன். அப்பொழுது தான், வெங்கட் பிரபுவிடம் உதவி இயக்குனராக இருந்த பிச்சுமணி என்னிடம் ஒரு கதையை சொன்னார். தயாரிக்க ஒப்புக்கொண்டேன். எனக்கு பிச்சுமணியை நீண்ட காலமாகவே தெரியும்.

இக்கதைக்கு ஜெய் தான் பொருத்தமானதாக இருப்பர் என எங்களுக்கு தோன்றியது. அவரை அணுகி இக்கதையை சொன்னபோது அவருக்கும் கதை பிடித்துப் போக நடிக்க ஒப்புக்கொண்டார். தற்போது முதல் கட்ட படப்பிடிப்பு முடிந்துவிட்டது.

எதிர்பார்த்ததைவிட படம் வேகமாக உருவெடுத்து வருகிறது. இப்படத்தில் இடம்பெற்றுள்ள மற்ற நடிகர், நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த விவரம் மற்றும் படத்தின் தலைப்பு விரைவில் அறிவிக்கப்படும்''.

X

Maalai Malar
www.maalaimalar.com