`கலகலப்பு-2' படப்பிடிப்பில் இணைந்த ஜெய்

சுந்தர்.சி. இயக்கத்தில் உருவாகி வரும் `கலகலப்பு-2' படப்பிடிப்பில் ஜீவா, சிவா, நிக்கி கல்ராணி, கேத்தரின் தெரசா உடன் நடிகர் ஜெய்யும் கலந்து கொண்டுள்ளார்.
`கலகலப்பு-2' படப்பிடிப்பில் இணைந்த ஜெய்
Published on

`கலகலப்பு-2' படப்பிடிப்பில் ஜீவா, மிர்ச்சி சிவா, கேத்தரின் தெரசா, நிக்கி கல்ராணி என பலரும் பங்கேற்றிருந்த நிலையில், நடிகர் ஜெய் மட்டும் பங்கேற்கவில்லை. இந்நிலையில், குடிபோதையில் கார் ஓட்டிய வழக்கில் தீர்ப்பு வெளிவந்த நிலையில், நடிகர் ஜெய் தற்போது படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ளார். இதையடுத்து படப்பிடிப்பு உண்யிலேயே கலகலப்பாக வேகமாக நடைபெற்று வருகிறது. படத்தில் ரோபோ சங்கர், மனோபாலா, வையாபுரி உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர்.

சுந்தர்.சி-யின் சொந்த தயாரிப்பு நிறுவனமான அவ்னி மூவிஸ் இப்படத்தை தயாரிக்கிறது. காரைக்குடியில் உருவாகி வரும் இப்படத்தின் படப்பிடிப்பு புனே, வாரணாசி மற்றும் ஐதராபாத் உள்ளிட்ட இடங்களிலும் நடத்தப்படுகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com