கயல் ஆனந்தியின் கால்களை ரசித்த இசையமைப்பாளர்

இசையமைப்பாளர் இஷான் தேவ் கயல் ஆனந்தியின் கால்களை ரசித்துப் பார்த்துக் கொண்டே அவரது படத்திற்கு இசையமைத்திருக்கிறாராம்.
கயல் ஆனந்தியின் கால்களை ரசித்த இசையமைப்பாளர்
Published on

என் ஆளோட செருப்பக் காணோம் படத்தின் பாடல்களைக் கேட்ட இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன், தன் ஒன்ராகா இசை நிறுவனத்தின் சார்பாக அதை வெளியிட்டார். ஒன்ராகா யூடியூப் சேனலில் "இரவில் வருகிற திருடன் போலவே" பாடல் செம ட்ரெண்ட் அடித்தது.

கயல் ஆனந்தியில் கால்களைச் சுற்றித்தான் என் ஆளோட செருப்பக் காணோம் படத்தின் கதை, காதல் எல்லாம் நகர்கிறது. படத்தின் முதல் போஸ்டராக இஷானுக்கு டைரக்டர் ஜெகன் காட்டியது அழகான செருப்புகள் அணிந்த கயல் ஆனந்தியின் கால்களைத் தான்.  ஆகையால் கதாநாயகியின் முகம் தெரியாமல் கால்களை ரசித்துத் தான் பாடல்களுக்கு மெட்டமைத்ததாக இஷான் தேவ் கூறியிருக்கிறார்.

விஜய ஸாகர் வரிகளில் படம் வெளியாகும் முன்னமே பாடல்கள் ஹிட்டடித்து. படம் வெளியான பின்னரும் பாடல்களுக்காக பாராட்டுகள் வருவதாக இஷான் கூறினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com