இருட்டு அறையில் இருந்து அடுத்த அறைக்கு மாறிய கவுதம் கார்த்திக்

சந்தோஷ் பி.ஜெயக்குமார் இயக்கத்தில் கவுதம் கார்த்திக் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’ படத்தின் புதிய அப்டேட். #IAMK #IruttuArayilMurattuKuthu
இருட்டு அறையில் இருந்து அடுத்த அறைக்கு மாறிய கவுதம் கார்த்திக்
Published on

`ஹரஹர மஹாதேவகி' படத்தை தொடர்ந்து சந்தோஷ் பி.ஜெயக்குமார் அடுத்ததாக ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’, `கஜினிகாந்த்' உள்ளிட்ட படங்களை இயக்கி வருகிறார். 

இந்த இரு படங்களையும் ஸ்டூடியோ கிரீன் சார்பில் கே.ஈ.ஞானவேல் ராஜா தயாரிக்கிறார். இதில் ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’ படத்தில் நாயகன், நாயகியாக கவுதம் கார்த்திக், வைபவி சாண்டில்யா நடிக்கின்றனர். அடல்ட் ஹாரர் காமெடி ஜானரில் உருவாகும் இந்த படத்தில் ரவி மரியா, மொட்டை ராஜேந்திரன், கருணாகரன் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். பாலமுரளி பாலா இசையமைக்கிறார். தருண் பாலாஜி ஒளிப்பதிவு செய்கிறார். 

விறுவிறுப்பாக நடைபெற்று வந்த இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிந்தது. தற்போது இப்படத்தின் டப்பிங் பணிகள் தொடங்கியுள்ளது. சென்னையில் உள்ள பிரபல டப்பிங் ஸ்டியோவில் இன்று பூஜை போட்டு அதற்கான வேலைகளில் மும்முரமாக படக்குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர்.

விரைவில் இப்படத்தின் பாடல்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com