இருமுகன் இயக்குனரின் அடுத்த அதிரடி: புதிர் போடும் ஞானவேல் ராஜா

விக்ரமை வைத்து ‘இருமுகன்’ படத்தை இயக்கிய ஆனந்த் சங்கர் இயக்கும் அடுத்த படத்தை ஞானவேல் ராஜா தயாரிக்க இருக்கிறார். இதில் நடிக்கும் நடிகர் யார் என்று ஒரு புதிர் வைத்திருக்கிறார் ஞானவேல் ராஜா.
இருமுகன் இயக்குனரின் அடுத்த அதிரடி: புதிர் போடும் ஞானவேல் ராஜா
Published on

‘அரிமா நம்பி’ படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் ஆனந்த் சங்கர். ஆக்‌ஷன் திரில்லர் கதையம்சம் கொண்ட இப்படத்தில் விக்ரம் பிரபு நாயகனாகவும், பிரியா ஆனந்த் நாயகியாகவும் நடித்திருந்தார்கள். இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது.

இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து விக்ரமை வைத்து ‘இருமுகன்’ என்ற சூப்பர் ஹிட் படத்தை கொடுத்தார். இதில் விக்ரமுடன் நயன்தாரா, நித்யாமேனன், நாசர் உள்ளிட்ட பலர் நடித்திருந்தார்கள். இப்படம் வணீக ரீதியாகவும் வெற்றி பெற்றது. இதில் விக்ரமின் நடிப்பு வித்தியாசமாகவும், ரசிக்கும் படியாகவும் இருந்தது.

இதையடுத்து அடுத்த படத்திற்கு தயாராகி இருக்கிறார் ஆனந்த் சங்கர். இவர் இயக்க இருக்கும் புதிய படத்தை ஞானவேல் ராஜா தனது ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் மூலம் தயாரிக்க இருக்கிறார். இப்படத்தின் கதாநாயகன் யாராக இருக்கும் என்று புதிர் வைத்திருக்கிறார் ஞானவேல் ராஜா. 

இந்த புதிருக்கு பலரும் தங்களுடைய கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். இதில் தங்களுக்கு பிடித்த ஹீரோக்களை ரசிகர்கள் பதிவு செய்து வருகிறார்கள். இந்த புதிருக்கான விடையை நாளை காலை 10 மணியளவில் வெளியிட இருக்கிறார்கள். 

இப்படமும் ஆக்‌ஷன் படமாக உருவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com