இரவுக்கு ஆயிரம் கண்கள்

மு.மாறன் இயக்கத்தில் அருள்நிதி - மஹிமா நம்பியார் நடிப்பில் உருவாகி இருக்கும் `இரவுக்கு ஆயிரம் கண்கள்' படத்தின் முன்னோட்டம். #Arulnidhi #IAK #IravukkuAayiramKangal
இரவுக்கு ஆயிரம் கண்கள்
Published on

`ஆக்ஸஸ் பிலிம் பேக்டரி' சார்பில் டில்லி பாபு தயாரித்திருக்கும் படம் `இரவுக்கு ஆயிரம் கண்கள்'.

மு.மாறன் இயக்கியிருக்கும் இந்த படத்தில் அருள்நிதி ஜோடியாக மஹிமா நம்பியார் நடித்துள்ளார். அஜ்மல், வித்யா பிரதீப், சாயா சிங், சுஜா வருணி, ஆனந்த்ராஜ், ஜான் விஜய், லக்‌ஷ்மி ராமகிருஷ்ணன், ஆடுகளம் நரேன் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். 

ஒளிப்பதிவு - அரவிந்த் சிங், இசை - சாம்.சி.எஸ், பாடல்கள் - சாம்.சி.எஸ், கலை - என்.கே.ராகுல், ஸ்டன்ட் - கணேஷ் குமார், எடிட்டிங் - சான் லோகேஷ், தயாரிப்பு - டில்லி பாபு, எழுத்து, இயக்கம் - மு.மாறன்.

ஒரே நாளில் நடைபெறும் சம்பவங்களை மையப்படுத்தி த்ரில்லர் கதையாக உருவாகி இருக்கும் இந்த படம் ஒரே இரவில் நடக்கும் கதையை மையப்படுத்தி உருவாகி இருக்கிறது. 

படத்தில் நடித்த அனுபவம் பற்றி படத்தின் நாயகன் அருள்நிதி கூறும்போது,

கால்டாக்சி டிரைவர் ஒருவர் பிரச்சினையில் மாட்டுகிறார். அதிலிருந்து எப்படி வெளியே வந்தார் என்பது தான் ‘இரவுக்கு ஆயிரம் கண்கள்’ படத்தின் கதை. இதில் அடுத்தடுத்து பல திருப்பங்கள் இருக்கும். பாடல்களும் யதார்த்தமாக இருக்கும். சினிமாத் தனமாக எதையும் செய்யவில்லை. தலைப்புக்கு ஏற்ப இரவு நேரத்தில் அதிகமாக படமாக்கினோம்.

இது நாம் அடிக்கடி கேள்விப்படும் சம்பவங்களை சேர்த்து விறுவிறுப்பாக, மு.மாறன் இதை இயக்கி இருக்கிறார். ஒருநாள் இரவில் நடக்கும் கதை. ஆக்‌ஷன் திரில்லராக இந்த படம் உருவாகி இருக்கிறது. இதில் அஜ்மல் பாத்திரம் பேசப்படும். அவருக்கும் எனக்கும் ஒரு சண்டை காட்சி இருக்கிறது. அதை மிகவும் ரசித்து கஷ்டப்பட்டு நடித்தோம். நாயகி மகிமா நம்பியார் நர்சாக வருகிறார். படத்தின் காட்சிகளும், வசனங்களும் அருமையாக அமைந்துள்ளன. 

படம் வருகிற 11-ஆம் தேதி ரிலீசாக இருக்கிறது. #Arulnidhi #IAK #IravukkuAayiramKangal

X

Maalai Malar
www.maalaimalar.com