இரவுக்கு ஆயிரம் கண்கள் ரசிகர்களை சீட்டின் நுனிக்கே வர வைக்கும் - டில்லிபாபு

மு.மாறன் இயக்கத்தில் அருள்நிதி - மஹிமா நம்பியார், நடிப்பில் த்ரில்லர் கதையாக உருவாகி இருக்கும் `இரவுக்கு ஆயிரம் கண்கள்' படம் ரசிகர்களை சீட்டின் நுனிக்கே வரவைக்கும் என்று டில்லி பாபு கூறியுள்ளார். #IravukkuAayiramKangal
இரவுக்கு ஆயிரம் கண்கள் ரசிகர்களை சீட்டின் நுனிக்கே வர வைக்கும் - டில்லிபாபு
Published on

அருள்நிதி நடிப்பில் த்ரில்லர் கதையாக உருவாகி இருக்கும் `இரவுக்கு ஆயிரம் கண்கள்' படம் வருகிற மே 11-ஆம் தேதி ரிலீசாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

மு.மாறன் இயக்கியிருக்கும் இந்த படத்தில் அருள்நிதி ஜோடியாக மஹிமா நம்பியார் நடித்துள்ளார். அஜ்மல், வித்யா பிரதீப், சாயா சிங், சுஜா வருணி, ஆனந்த்ராஜ், ஜான் விஜய், லக்‌ஷ்மி ராமகிருஷ்ணன், ஆடுகளம் நரேன் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். 

ஒரே நாளில் நடைபெறும் சம்பவங்களை மையப்படுத்தி த்ரில்லர் கதையாக உருவாகி இருக்கும் இந்த படத்திற்கு சாம்.சி.எஸ் இசையமைத்திருக்கிறார். 

`ஆக்ஸஸ் பிலிம் பேக்டரி' சார்பில் டில்லி பாபு இந்த படத்தை தயாரித்திருக்கிறார். இரவுக்கும், இரவில் நடைபெறும் பல மர்மங்களுக்கும் ஒரு நெருங்கிய தொடர்பு இருக்கும். அந்த வகையில் ஒரு பிரச்சனையில் இருந்து ஒரு சராசரி மனிதன் எப்படி வெளியே வருகிறான் என்பதை மையப்படுத்தி படத்தின் கதை அமைக்கப்பட்டுள்ளது. படம் குறித்து தயாரிப்பாளர் டில்லி பாபு பேசும் போது,

திரில்லர் வகை படங்களின் தீவிர ரசிகனாக இருப்பதால், இயக்குனர் மு.மாறனின் கதை சொல்லலை கண்டு வியந்தேன். சொன்ன கதையை திரையில் காட்சிகளாக சிறப்பாக, திறமையாக கொண்டு வந்தது மகிழ்ச்சி. இரவுக்கு ஆயிரம் கண்கள் படத்தில் சீட்டின் நுனிக்கு வரவைக்கும் காட்சிகள் நிறைய உள்ளன, அவை உங்கள் கண்களை இமைக்க விடாது. ஈர்க்கக் கூடிய விஷயங்களை திரைக்கதையில் சரியாக பிணைத்துள்ளார் என்றார். #IravukkuAayiramKangal #Arulnidhi

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com