பட விழாவுக்கு போகாதது பற்றி பாக்யராஜ் விமர்சனத்துக்கு இனியா பதில்

சமீபத்தில் நடைபெற்ற பட விழாவுக்கு போகாதது பற்றி இயக்குநரும், நடிகருமான பாக்யராஜ் கூறிய விமர்சனத்துக்கு இனியா பதில் அளித்துள்ளார்.
பட விழாவுக்கு போகாதது பற்றி பாக்யராஜ் விமர்சனத்துக்கு இனியா பதில்
Published on

இது பற்றி இந்த விழா வில் பேசிய இயக்கு னர் கே.பாக்யராஜ், “நடிகை இனியா இந்த படத்துக்கு வராததால் நஷ்டம் அவருக்குத்தான் படக் குழுவுக்கு அல்ல. ‘சுவர் இல்லாத சித்திரங்கள்’ படத்தில் நான்,

‘கண்ணடிச்சு கூப்பிட்டா வராத பொம்பளை கைய பிடிச்சு இழுத்தா மட்டும் வந்துடவா போகுது’ என்று வசனம் எழுதி இருந்தேன். அது போல் அவர்களுக்குத்தான் இந்த பொறுப்பு இருக்கவேண்டும். அவர் வராதது பிரச்சினையாகி விட்டதால், இனி எல்லா விழாக் களிலும் கலந்து கொள் வார் என்று எதிர்பார்க்கிறேன்” என்று குறிப்பிட்டார்.

இதற்கு இனியா அளித்துள்ள பதிலில், “ சில நாட்களுக்கு முன்பு கணுக்காலில் சுளுக்கு ஏற் பட்டது. சரியாக நடக்க முடிய வில்லை. இதனால் 10 நாட்கள் ஓய்வு எடுக்கும் படி டாக்டர் கேட்டுக்கொண்டார்.

இசை வெளியீட்டு விழாவுக்கு வாட்ஸ்அப் மெசேஜ் மட்டும் வந்தது. அழைப்பிதழ் வரவில்லை. காலில் பிரச்சினை இருப்பதால் விழாவுக்கு வர முடியாது என்று ஏற்கனவே படக்குழுவுக்கு தெரிவித்தேன். என் காலை புகைப்படம் எடுத்தும் அனுப்பி வைத்தேன். போகக் கூடாது என்ற எண்ணம் எதுவும் இல்லை.

பாக்யராஜ் சார் சீனியர் அவரை மதிக்கிறேன். படக்குழு சொன்ன தகவலை வைத்து அவர் மேடையில் இப்படி பேசி இருக்கிறார். அதில் எனக்கு வருத்தம் இல்லை. இந்த சம்பவத்தால் என்னை பொறுப்பு இல்லாதவர், திமிர் பிடித்தவர் என்று அனைவரும் நினைக்கிறார்கள். அது தவறு ” என்று தெரிவித்துள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com