ஆர்.கே.நகர் என்னை உத்வேகப்படுத்தியது - இனிகோ பிரபாகர்

பல படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமான இனிகோ பிரபாகர் ஆர்கேநகர் என்னை உத்வேகப்படுத்தியது என்று கூறியிருக்கிறார்.
நடிகர் இனிகோ பிரபாகர்
நடிகர் இனிகோ பிரபாகர்
Published on

 சென்னை 28, சென்னை 28 II, பூ, சுந்தரபாண்டியன், ஆர்.கே நகர் என இவர் நடித்த அனைத்து படங்களிலும் இவரது நடிப்பும், கதாபாத்திரத்தின் தன்மையை கையாண்ட விதமும் பலரையும் கவர்ந்தது. அழகர் சாமியின் குதிரை, ரம்மி, பிச்சுவாகத்தி, வீரய்யன் படங்களில் நாயகனாக நடித்திருந்தார்.

 நடிகர் இனிகோ பிரபாகர் கூறுகையில், “நான் என்றும் என் கதாபாத்திரத்தின் தன்மை மாறாமல் நடிப்பது ரசிகர்களுக்கு பிடித்திருந்தது. அதிலும் ஆர்.கே நகர் படத்தில் வில்லனாக நடித்திருந்தாலும் அந்த படத்தில் கதாநாயகனுக்கு நிகரான கதாபாத்திரம் என்பதால் எனது நடிப்பு எதார்த்தமாக இருக்க வேண்டும் என்று இயக்குனர் சரவண ராஜன் விரும்பினார், நானும் அதையே செய்தேன். இயக்குனர் வெங்கட்பிரபு ஆர்.கே நகர் படத்தில் என் நடிப்பை பலரும் பாராட்டியதாக கூறியது என்னை மேலும் உத்வேகப்படுத்தியது.

தற்போது இரண்டு புதிய படங்களில் கதாநாயகனாக நடிக்கின்றேன். இந்த இரண்டு படங்களின் விவரங்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்றார்.

X

Maalai Malar
www.maalaimalar.com