கமல்ஹாசனை சந்திக்க விரும்புகிறேன்: இந்தி நடிகர் ராஜ்குமார் ராவ் பேட்டி

நடிகர் கமல்ஹாசனை சந்திக்க விரும்புவதாக நடிகர் ராஜ்குமார் ராவ் கூறியுள்ளார். இது குறித்த விரிவான செய்தியை பார்க்கலாம்.
கமல்ஹாசனை சந்திக்க விரும்புகிறேன்: இந்தி நடிகர் ராஜ்குமார் ராவ் பேட்டி
Published on

இந்தி நடிகர் ராஜ்குமார் ராவும், நடிகை சுருதிஹாசனும் ‘பெஹன் ஹோகி தேரி’ என்ற இந்திப்படத்தில் நடித்து வருகின்றனர். இந்த படம் விரைவில் திரைக்கு வருகிறது. இந்நிலையில், ராஜ்குமார் ராவ் மும்பையில் நிருபர்களிடம் கூறியதாவது:-

நடிகர் கமல்ஹாசன் மிகப்பெரிய திறமைசாலி. அவர் எங்களுக்கு எப்போதும் உத்வேகமாக திகழ்கிறார். நிறைய படங்களில் அவரது நடிப்புத்திறமையை கண்டு வியந்திருக்கிறேன். ரசித்திருக்கிறேன். ஆனாலும், ‘அப்பு ராஜா’ (தமிழில் அபூர்வ சகோதரர்கள்) படத்தில் அவரது நடிப்பு என்னை மிகவும் ஈர்த்தது.

நான் கமல்ஹாசனின் மிகப்பெரிய ரசிகன். அவரை சந்திக்க விரும்புகிறேன். அவருடன் சினிமா பற்றி நிறைய பேச வேண்டும். இதற்காக ஏற்பாடு செய்து தருமாறு சுருதிஹாசனிடம் கேட்டிருக்கிறேன். அவரும் ஏற்பாடு செய்வதாக கூறி இருக்கிறார்.

இவ்வாறு ராஜ்குமார் ராவ் தெரிவித்தார்.

X

Maalai Malar
www.maalaimalar.com