நடிகை ஆவேன் என்று நினைக்கவில்லை : நிக்கி கல்ராணி

தமிழில் பல படங்களில் பிசியாக நடித்து வரும் நிக்கி கல்ராணி, நான் நடிகை ஆவேன் என்று நினைக்கவில்லை என்று பேட்டி அளித்துள்ளார்.
நடிகை ஆவேன் என்று நினைக்கவில்லை : நிக்கி கல்ராணி
Published on

“இதுபோன்ற படங்களில் இதுவரை நடித்ததில்லை. ‘நெருப்புடா’ படத்தில் ‘ரிஸ்க்‘ எடுத்து நடித்தேன். இதில் மருத்துவ கல்லூரி மாணவியாக வருகிறேன். நான் டாக்டர் ஆகவேண்டும் என்பது என் அம்மாவின் ஆசை. எனக்கும் அந்த ஆசை இருந்தது. எனவே அறிவியல் பாடம் எடுத்து படித்தேன். ஆனால் சினிமாவுக்கு வந்து விட்டேன். நான் நடிகை ஆவேன் என்று முதலில் நினைக்கவில்லை.

‘நெருப்புடா’ படத்தில் நடிக்கும் போது விக்ரம் பிரபு பற்றி நேரில் தெரிந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. அவர் மரியாதையாக அன்பாக பழகுவார். அதிகம் அலட்டிக் கொள்ள மாட்டார். அமைதியானவர்.

பலரும் நடிக்க தயங்கும் கதைகளை நான் தேர்வு செய்வேன். அதுபோன்ற படங்களில் நடித்து வெற்றி பெற்று இருக்கிறேன். என் மனதுக்கு பிடித்த சவாலான கதைகளையே தேர்வு செய்து நடிக்கிறேன். இப்போது நான் ‘ஹர ஹர மகாதேவகி’, ‘பக்கா’ படங்களில் நடிக்கிறேன். எல்லா படங்களுமே வித்தியாசமானவை.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com