என்னைப் புதைக்கும்போது எதையுமே கொண்டுப் போகப் போவதில்லை - நடிகர் தனுஷ் உருக்கம்

திரைப்பட உலகை பொருத்தவரை போட்டி முக்கியம் என்று நான் நினைப்பதில்லை. அதில் அர்த்தமே இல்லை என்று நடிகர் தனுஷ் தெரிவித்துள்ளார்.
என்னைப் புதைக்கும்போது எதையுமே கொண்டுப் போகப் போவதில்லை - நடிகர் தனுஷ் உருக்கம்
Published on

அப்போது அவர் கூறியதாவது:-

‘ரஞ்சனா’, ‘ஷமிதாப்’ படங்களின் புரோமோஷனுக்காக நான் இதற்கு முன்னர் மும்பை வந்திருக்கிறேன். என்னைப் பொருத்தவரை வசூல் ரீதியான ஒரு படத்தின் வெற்றி மிகவும் முக்கியமானதாக கருதுகிறேன்.

ஒரு படத்தின் தோல்வி என்னை பாதித்ததில்லை என்று பொய் சொல்ல நான் விரும்பவில்லை. ‘ஷமிதாப்’ படம் சரியாக ஓடாதது என்னை காயப்படுத்தியது. அந்தப் படத்தை நினைத்து பெருமைப்படுகிறேன். அதே படத்தில் நடிக்க மீண்டும் வாய்ப்பு கிடைத்தால் நடிக்க விரும்புகிறேன்.

ஒரு நடிகன் என்ற முறையில் எல்லா முடிவுகளையும் சரியாக தேர்வு செய்தால் அந்தப் படம் வசூல்ரீதியாக வெற்றிப் படமாக அமையும். ‘ஷமிதாப்’ படமும் அப்படித்தான். ஆனால், நமது முடிவுகளின் வெளிப்பாடு சில நேரங்களில் சரியாக அமையும், அமையாமலும் போகும். அந்த வகையில் ‘ஷமிதாப்’ மிக உயர்ந்தப் படம். அது சரியாக ஓடாதது என்னை காயப்படுத்தியது.

திரைப்பட உலகை பொருத்தவரை போட்டி முக்கியம் என்று நான் நினைப்பதில்லை. அதில் அர்த்தமே இல்லை. போட்டி என்றால் அதற்கான காரணம் ஒன்றிருக்க வேண்டும். சினிமாத்துறையில் நமது படங்கள் வெற்றி பெற்றால் நாம் அனைவருமே வெற்றியாளர்கள்தான்.

முந்தையப் படத்தைவிட அடுத்தப் படம் சிறப்பாக அமைய வேண்டும். என் படத்தை பார்க்கவரும் ரசிகர்களுக்கு சிறந்ததை தரவேண்டும் என்பதால் நான் என்னோடு மட்டுமே போட்டிப் போடுகிறேன்.

மிகவும் பாதுகாப்பான நடிகனாக என் வேலையில் நான் மகிழ்ச்சியாக ஈடுபட்டு வருகிறேன். நாளை எனக்கு வேலை இருக்குமா? இருக்காதா? என்பது பற்றி எதுவும் நினைப்பதில்லை. எனக்கென்று வாய்க்கப்பெற்றது நிச்சயமாக எனக்கு கிடைக்கும். கடவுள் அதை கூட்டியோ, குறைத்தோ கொடுக்கப் போவதில்லை. ஆறடி நிலத்துக்கு அடியில் என்னைப் புதைக்கும்போது எதையுமே நான் கொண்டுப் போகப் போவதில்லை.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com