இந்தி நடிகை கிரித்திகா சவுத்ரி கொலை?: வீட்டில் பிணமாக கிடந்தார்

இந்தி நடிகை கிரித்திகா சவுத்ரி வீட்டில் மர்மமான நிலையில் பிணமாக கிடந்தார். அவர் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள்.
இந்தி நடிகை கிரித்திகா சவுத்ரி கொலை?: வீட்டில் பிணமாக கிடந்தார்
Published on

இதைத்தொடர்ந்து அவருக்கு பட வாய்ப்புகள் வந்தன. ‘ரஜ்ஜோ’ என்ற இந்தி படத்தில் கங்கனா ரணாவத்துடன் இணைந்து நடித்தார். இதில் அவர் சிறப்பாக நடித்து இருந்ததாக பாராட்டுகள் கிடைத்தன. மேலும் சில இந்தி படங்களிலும் நடித்து இருக்கிறார். டெலிவிஷன் தொடர்களிலும் நடித்து வந்தார்.

இந்த நிலையில், கிரித்திகா தங்கி இருந்த வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியது. இதுகுறித்து அக்கம்பக்கத்தினர் போலீசுக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் விரைந்து வந்தனர். வீடு வெளிப்பக்கமாக பூட்டி இருந்ததால் பூட்டை உடைத்து உள்ளே சென்றனர். வீட்டுக்குள் கிரித்திகா பிணமாக கிடந்தார். அவரது உடல் அழுகிய நிலையில் இருந்தது.

இறந்து 3 அல்லது 4 நாட்கள் ஆகி இருக்கலாம் என்று கூறப்படுகிறது. போலீசார் பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மர்ம சாவு என்று வழக்குப்பதிவு செய்து விசாரணை நடக்கிறது. வீட்டின் வெளியே பூட்டப்பட்டு இருந்ததால், கிரித்திகா கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்று சந்தேகிப்பதாக போலீசார் தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com