

2009-ம் ஆண்டு தமிழக அரசு, திரையரங்கு நுழைவு கட்டணத்தை நிர்ணயம் செய்து, அரசாணை வெளியிட்டுள்ளது. அதில், குளிர்சாதன வசதி, உணவகம் உள்ளிட்ட வசதிகளை கொண்ட திரையரங்குகளில் ரூ.10 முதல் ரூ.120 வரை யிலும், இந்த வசதிகள் இல்லாத திரையரங்குகள் ரூ.5 முதல் ரூ.50 வரை கட்டணம் வசூலிக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது.
ஆனால், புதிய படம் வெளியாகும்போது, முதல் 5 நாட்களுக்கு ரூ.200 முதல் ரூ.500 வரை வசூலிக்கின்றனர்’ என்று கூறியிருந்தார்.
மேலும், ‘தற்போது நடிகர் அஜித் நடித்து இருக்கும் விவேகம் திரைப்படம் வெளியாகியுள்ளது. இந்த திரைப்படத்தை வெளியிட்டுள்ள தமிழகம் முழுவதும் உள்ள திரையரங்குகள், ரூ.200 முதல் ரூ.500 வரை அளவுக்கு அதிகமாக, சட்ட விரோதமாக ரசிகர்களிடம் இருந்து கட்டணத்தை வசூலிக்கின்றன.
இதை தடுக்க வேண்டும் என்று கடந்த 17-ந் தேதி முதல் 22-ந் தேதி வரை முதல்-அமைச்சர் தனிப்பிரிவு, உள்துறை முதன்மை செயலாளர், வணிக வரித்துறை ஆணையர், சிறப்புக்குழு இணை ஆணையர் உள்பட பலரிடம் புகார் செய்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
எனவே, விவேகம் திரைப்படத்தை பார்க்க வரும் ரசிகர்களிடம் அதிக கட்டணத்தை வசூலிக்கும் திரையரங்குகள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கவும், அந்த திரையரங்கு உரிமையாளர்களுக்கு நாள் ஒன்றுக்கு தலா ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கவும், இந்த நடவடிக்கைகளை மேற்கொள்ள சிறப்பு குழுக்களை மாநிலம் முழுவதும் அமைக்கவும், தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும்’ என்று கூறியிருந்தார்.