வளர்மதி மீதான குண்டர் சட்டம் ரத்து: ஜி.வி.பிரகாஷ் கருத்து

வளர்மதி குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டதை ரத்து செய்து உத்தரவிட்டது தொடர்பாக ஜி.வி.பிரகாஷ் தனது கருத்தைத் தெரிவித்துள்ளார்.
வளர்மதி மீதான குண்டர் சட்டம் ரத்து: ஜி.வி.பிரகாஷ் கருத்து
Published on
தமிழ்நாடு பொதுநல மாணவர் எழுச்சி இயக்க சேலம் மாவட்டப் பொறுப்பாளரும், பெரியார் பல்கலைக்கழகத்தின் இதழியல் மாணவியுமான வளர்மதி, கடந்த ஜூலை மாதம் குண்டர் தடுப்புச் சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டார். இந்நிலையில், மாணவி வளர்மதி குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டதை ரத்து செய்து இன்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வளர்மதிக்கு பலர் பாராட்டைகளையும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். நடிகர் கமல் ஹாசன் தனது டுவிட்டர் பக்கத்தில் ‘வளர்மதி வளர், பௌர்ணமியை நோக்கி. மயங்கா நீதி தேவர்க்கும் வணக்கம்’ என்று குறிப்பிட்டு இருந்தார்.

இந்நிலையில் நடிகரும் இசையமைப்பாளருமான ஜி.வி.பிரகாஷ் தனது டுவிட்டர் பக்கத்தில், ‘குண்டர் சட்டத்தின் குரல்வளை நெறித்து. தங்கை வளர்மதி தரணி போற்ற வருகிறாள்’ என்று பதிவிட்டிருக்கிறார்.
X

Maalai Malar
www.maalaimalar.com