ஹார்வர்டு தமிழ் இருக்கைக்காக இசை நிகழ்ச்சி நடத்தும் ஜி.வி.பிரகாஷ்

ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கைக்காக இசையமைப்பாளர் மற்றும் நடிகர் ஜி.வி.பிரகாஷ் இசை கச்சேரி நடத்தி நிதி திரட்ட இருக்கிறார்.
ஹார்வர்டு தமிழ் இருக்கைக்காக இசை நிகழ்ச்சி நடத்தும் ஜி.வி.பிரகாஷ்
Published on

முதல்வரை சந்தித்தது தொடர்பாக ஜி.வி.பிரகாஷ் கூறும்போது, ‘ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைய மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தேர்தல் சமயத்தில் வாக்குறுதி கொடுத்திருந்தார். அதை நிறைவேற்றிய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களை சந்தித்து நன்றி தெரிவித்தேன்.

தமிழ் இருக்கைக்காக பெரும் தொகையை தமிழக அரசாங்கம் கொடுத்திருக்கிறது. மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்த விஷயத்தில் உறுதுணையாக இருந்த அமைச்சர் மாஃபா பாண்டியராஜனுக்கு நன்றி.

தமிழ் இருக்கை அமைவதற்காக அனைவரும் ஒன்றுகூடியிருப்பது சந்தோஷமாக இருக்கிறது. அத்தொகையில் 75% கடந்திருக்கிறோம், இன்னும் 25% கடக்க வேண்டும். இதில் வெற்றியடைவோம் என்று நம்புகிறேன். தமிழ் உணர்வில் ஒன்றாக இணைந்திருக்கிறோம். இந்த முயற்சிக்கு மத்திய அரசும் உதவ வேண்டும்.

X

Maalai Malar
www.maalaimalar.com