இணைய தொடருக்கு மாறிய காயத்ரி

நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமான காயத்ரி, தற்போது இணைய தொடர் ஒன்றில் நடித்துள்ளார். #Gayathri
இணைய தொடருக்கு மாறிய காயத்ரி
Published on

நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் காயத்ரி. தொடர்ந்து புரியாத புதிர், ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன், ரம்மி படங்களில் நடித்தார். இந்த 4 படங்களிலுமே விஜய் சேதுபதி நடித்து இருந்தார். காயத்ரி நடிப்பில் அடுத்து வர இருக்கும் படங்கள் சூப்பர் டீலக்ஸ் மற்றும் சீதக்காதி. இவற்றிலும் விஜய் சேதுபதி தான் கதாநாயகன். காயத்ரி நடித்த இணைய தொடரான வெள்ள ராஜா ரிலீசாகி இருக்கிறது. இணைய தொடர்களுக்கான வரவேற்பு இந்தியில் உள்ள அளவுக்குத் தமிழில் உருவாகவில்லை.

என்றாலும் குறிப்பிட்ட ரசிகர்கள் கூட்டம் இதற்கு உண்டு. பரிசோதனை முயற்சியாக, தங்களது திறமையை நிரூபிப்பதற்காக இளைஞர்கள் இணைய தொடர் பக்கம் வருகின்றனர். தற்போது பாபி சிம்ஹா, பார்வதி நாயர், காயத்ரி எனத் திரையுலகில் பிசியாக வலம் வரும் முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து புதிய இணைய தொடரில் நடித்துள்ளனர். 

‘வெள்ள ராஜா’ என பெயரிடப்பட்டுள்ள இந்த சீரிஸ் தெலுங்கு, இந்தி மொழிகளில் டப் செய்யப்பட்டு ஒளி பரப்பப்படஉள்ளது. போதைப் பொருள் கடத்தும் கும்பலின் தலைவராக பாபி சிம்ஹா நடித்துள்ளார். பார்வதி நாயர் காவல்துறை அதிகாரியாக நடித்துள்ளார். காயத்ரியும், காளி வெங்கட்டும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சவாரி திரைப் படத்தை இயக்கிய குகன் சென்னியப்பன் இதை இயக்கி உள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com