பவர்ஸ்டார் சீனிவாசன் மீது ரூ.4 லட்சம் மோசடி புகார்

சினிமா வாய்ப்பு தருவதாக கூறி, தயாநிதி என்பவரை ஏமாற்றியதாக பவர்ஸ்டார் சீனிவாசன் மீது மோசடி புகார் அளிக்கப்பட்டுள்ளது.
பவர்ஸ்டார் சீனிவாசன் மீது ரூ.4 லட்சம் மோசடி புகார்
Published on

எனக்கும் நடிகர் பவர்ஸ்டார் சீனிவாசனுக்கும் கடந்த 2014-ம் ஆண்டு பழக்கம் ஏற்பட்டது. பின்னர் எங்களுக்குள் நட்பு உருவானது. 2015-ம் ஆண்டு சினிமாவில் நடிக்க வாய்ப்பு வாங்கி தருமாறு பவர்ஸ்டார் சீனிவாசனிடம் கேட்டேன். அதற்கு அவர் ரூ.4 லட்சம் பணம் கேட்டார். நானும் அவரிடம் பணத்தை கொடுத்தேன்.

ஆனால் அவர் நடிக்க வாய்ப்பு வாங்கி தரவில்லை. பணத்தையாவது திருப்பி கேட்டேன். அதையும் கொடுக்க மறுத்து விட்டார். அவரிடம் இருந்து ரூ.4 லட்சம் பணத்தை வாங்கி தர வேண்டும்.

இவ்வாறு புகார் மனுவில் கூறி இருந்தார்.

X

Maalai Malar
www.maalaimalar.com