3-வது கருப்பு தமிழன் ஆளட்டும்: காமராஜர் - அண்ணா படத்துடன் ரஜினி போஸ்டர்

3-வது கருப்பு தமிழன் ஆளட்டும் என காமராஜர் - அண்ணா படத்துடன் ரஜினி ரசிகர்கள் போஸ்டர் வெளியிட்டு வெற்றிலை - பாக்கு வைத்து வா... தலைவா... வா... அழைக்கின்றனர்.
3-வது கருப்பு தமிழன் ஆளட்டும்: காமராஜர் - அண்ணா படத்துடன் ரஜினி போஸ்டர்
Published on

ரஜினிகாந்த் எப்போது அரசியலுக்கு வருவார்? என்பது உறுதியாக தெரியவில்லை. ஆனால் எப்போதும் போஸ்டர்கள் மூலமாக ரசிகர்கள் அவரை அரசியலுக்கு அழைத்துக் கொண்டே இருக்கிறார்கள்.

ஒவ்வொரு பிறந்தநாளின் போதும் ரஜினியை அரசியலுக்கு அழைத்து விதம் விதமான போஸ்டர்களை ஒட்டுவது அவரது ரசிகர்களின் வழக்கம். அது போன்று ஒட்டப்படும் போஸ்டர்களில் ரஜினியை அரசியலுக்கு இழுக்கும் வகையில் ஆர்ப்பரிக்கும் வாசகங்கள் அதில் அச்சிடப்பட்டிருக்கும்.

இந்த ஆண்டும் ரஜினியின் பிறந்தநாளான இன்று அவரது ரசிகர்கள் ஒட்டியுள்ள போஸ்டர்களும் அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன.

மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர்களான காமராஜர் - அண்ணா ஆகியோரின் போட்டோக்களுடன் ரஜினியை ஒப்பிட்டு ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்களில் 3-வது கருப்பு தமிழன் ஆளட்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

அரசியல் வெற்றிடத்தை நிரப்ப வெற்றிலை - பாக்கு வைத்து அழைக்கிறோம். வா... தலைவா.... வா என்றும், போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது. ரஜினிகாந்த் முதல் - அமைச்சராக பொறுப்பேற்பது போன்று ரஜினிகாந்த் எனும் நான்... என்று தொடங்கும் வாசகங்களும் இடம் பெற்றுள்ளன. 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com