எச்சரிக்கை இது மனிதர்கள் நடமாடும் இடம் படக்குழுவினரின் முக்கிய அறிவிப்பு

மா மற்றும் லட்சுமி குறும்படங்களை இயக்கி பிரபலமான சர்ஜுன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘எச்சரிக்கை இது மனிதர்கள் நடமாடும் இடம்’ படக்குழுவினரின் முக்கிய அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. #Echarikkai
எச்சரிக்கை இது மனிதர்கள் நடமாடும் இடம் படக்குழுவினரின் முக்கிய அறிவிப்பு
Published on

தப்பு தண்டா படத்தின் மூலம் திரைத்துறைக்கு நடிகராகவும் தயாரிப்பாளராகவும் அறிமுகமானவர் வி.சத்யமூர்த்தி. அதற்கு பிறகு சுசீந்திரன் இயக்கிய 'நெஞ்சில் துணிவிருந்தால்' விஜய்சேதுபதி நடித்த 'ஒரு நல்ல நாள் பார்த்து சொல்லேன்', 'கோலிசோடா 2' போன்ற படங்களை மொத்தமாக வாங்கி வெளியிட்ட சத்யமூர்த்தி தற்போது 'எச்சரிக்கை இது மனிதர்கள் நடமாடும் இடம்" படத்தை பார்த்து பாராட்டிததுடன் மொத்தமாக வாங்கி வெளியிடுகிறார்.

டைம்லைன் சினிமாஸ் மற்றும் சுந்தரம் அண்ணாமலை புரொடக்‌ஷன்ஸ் பட நிறுவனங்கள் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளனர். யூடியூப்பில் பிரபலமான மா, லஷ்மி ஆகிய குறும்படங்களை இயக்கிய சர்ஜுன் இப்படத்தை இயக்கியுள்ளார்.

இவர் மணிரத்னம், ஏ.ஆர்.முருகதாஸ் ஆகியோரிடம் உதவியாளராக பணியாற்றியவர். இந்தப் படத்தின் சிறப்பையும் மா, லஷ்மி படங்களின் நேர்த்தியையும் கேள்விப்பட்ட அறம் குலேபகாவலி படங்களின் தயாரிப்பாளர் ராஜேஷ், நயன்தாரா இருவரும் அவர் சொன்ன வித்தியாசமான கதையை கேட்டு உடனடியாக அவரை ஒப்பந்தம் செய்திருக்கிறார்கள்.

எச்சரிக்கை இது மனிதர்கள் நடமாடும் இடம் பற்றி இவர் கூறும்போது, ‘இது கிரைம் திரில்லர் படம். எச்சரிக்கை இது மனிதர்கள் நடமாடும் இடம் என்கிற டைட்டிலிலேயே இது திரில்லர் படம் என்று சொல்லி இருக்கிறோம். சத்யராஜ் சார் ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரியாக தூள் கிளப்பி இருக்கிறார். கிட்நாப் பற்றி இதில் சொல்லி இருக்கிறோம். பாண்டிச்சேரி, சென்னை போன்ற இடங்களில் படப்பிடிப்பு நடந்திருக்கிறது.

படத்தை பார்த்த கிளாப் போர்டு சத்யமூர்த்தி பாராட்டியதோடு மொத்தமாக வாங்கி ரிலீஸ் செய்கிறார். இப்படம் ஆகஸ்ட் 24ம் தேதி வெளியாக இருக்கிறது’ என்றார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com