பயணம் சார்ந்த காதல் கதையில் துல்கர் சல்மான்

சோலோ படத்தின் வெற்றியை தொடர்ந்து பயணம் சார்ந்த காதல் கதையில் நடிக்க இருக்கிறார் துல்கர் சல்மான்.
பயணம் சார்ந்த காதல் கதையில் துல்கர் சல்மான்
Published on

நடிகர் துல்கர் சல்மானின் அடுத்த நேரடி தமிழ் படத்திற்கு 'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்' என பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்தை புதுமுக இயக்குனர் தேசிங் பெரியசாமி இயக்கவுள்ளார். இவர் இயக்குனர் விஜய் மில்டனிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர். இப்படத்தை பிரான்சிஸ் தயாரிக்கவுள்ளார்.

இப்படம் குறித்து இயக்குனர் தேசிங் பெரியசாமி பேசுகையில், ''இது ஒரு பயணம் சார்ந்த காதல் கதை. எல்லா தரப்பட்ட எமோஷன்களும் இக்கதையில் உள்ளன. இக்கதைக்கான தலைப்பை சில காலமாகவே தேடி வந்தோம். அப்பொழுதுதான் ரஹ்மான் சாரின் பெரிய ஹிட் பாடல் 'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்' பாடல் மனதிற்கு வந்தது.

காதலையும் ரொமான்ஸையும் ஒரே வரியில் வர்ணிக்க இந்த வரியை விட பொருத்தமானது வேறெதுவும் இல்லை. மிக பெரிய இளைஞர் ரசிகர் பட்டாளம், குறிப்பாக பெண் ரசிகர் பட்டாளம் உள்ள ஒரு ஹீரோ துல்கர் சல்மான். இக்கதைக்கு அவரை விட பொருத்தமான ஹீரோ யாருமில்லை. அவரது நடிப்பாலும், வசீகரத்தாலும் இப்படத்தை வேற லெவெலுக்கு கொண்டு செல்வார் என உறுதியாக நம்புகிறேன்.

X

Maalai Malar
www.maalaimalar.com