போதை மருந்து விவகாரம்: ‘பாகுபலி’ நடிகரிடம் விசாரணை

போதை மருந்து விவகாரம் தொடர்பாக ‘பாகுபலி-2’ படத்தில் நடித்துள்ள நடிகர் சுப்பாராஜூ விசாரணைக்கு ஆஜராகி விளக்கம் அளித்துள்ளார்.
போதை மருந்து விவகாரம்: ‘பாகுபலி’ நடிகரிடம் விசாரணை
Published on

போதை மருந்து விவகாரம் தொடர்பாக ‘பாகுபலி-2’ படத்தில் நடித்துள்ள நடிகர் பி.சுப்பாராஜூவை விசாரணைக்கு ஆஜராகுமாறு போலீசார் உத்தரவிட்டு இருந்தனர்.

இந்த நிலையில் நேற்று ஐதராபாத்தில் உள்ள கலால் வரித்துறை அலுவலகத்துக்கு வந்து சிறப்பு புலனாய்வு குழு அதிகாரிகள் முன்பு அவர் ஆஜரானார். அவரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தினார்கள்.

விசாரணைக்கு பி.சுப்பாராஜூ ஒத்துழைத்ததாகவும், அவரிடம் நடத்திய விசாரணையில் சில பயனுள்ள தகவல்கள் கிடைத்து இருப்பதாகவும் கலால் வரித்துறை அமலாக்கப் பிரிவு இயக்குனர் அகுன் சபர்வால் நிருபர்களிடம் தெரிவித்தார்.

சிறப்பு விசாரணை குழு முன்பு விசாரணைக்காக நடிகர் தருண் குமார் இன்று ஆஜராக இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com