

சாய்பல்லவி தமிழில் நாயகியாக அறிமுகம் ஆகும் ‘கரு’ படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது.
“ ‘பிரேமம்’ மலையாள படத்தில் நடித்த பிறகு தமிழில் எப்போது நடிப்பீர்கள் என்று கேட்டுக்கொண்டே இருந்தார்கள். ‘கரு’ படத்தின் கதையை கேட்ட பிறகு தான் நடிக்க ஒப்புக் கொண்டேன். இது போன்ற நல்ல கதைக்காகத்தான் இத்தனை நாள் காத்திருந்தேன்.
இந்த படத்தில் பேபி வெரோணிக்கா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். அவருடன் பல காட்சிகளில் போட்டி போட்டு நடிக்க வேண்டியது இருந்தது. ‘கரு’ படத்தில் நடித்தது புதிய அனுபவம்” என்றார்.
இயக்குனர் விஜய், “ ‘கரு’ படம் எடுக்க முடிவு செய்த போது இதில் வேறு ஒரு குழந்தையைதான் நடிக்க வைத்தோம். அவரை வைத்துதான் ‘கரு’ முதல் போஸ்டர் வெளியிடப்பட்டது. ஆனால், கடைசியில் அந்த குழந்தை நடிக்க மறுத்துவிட்டது. அதன் பிறகு ஒரு விளம்பர படத்தில் பேபி வெரோணிக்காவை பார்த்து இந்த படத்தில் நடிக்க வைத்தோம். இந்த விஷயத்தை இப்போதுதான் சொல்கிறேன். இது சாய்பல்லவிக்கே இப்போதுதான் தெரியும்” என்று கூறினார். நிகழ்ச்சியில் படக்குழுவினர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.