பற படப்பிடிப்பை தொடங்கி வைத்த ரஞ்சித்

ரஜினியை வைத்து ‘காலா’ படத்தை இயக்கி வரும் பா.ரஞ்சித், கீரா இயக்கும் ‘பற’ படத்தின் படப்பிடிப்பை ஆக்‌ஷன், கட் சொல்லி தொடங்கி வைத்தார்.
பற படப்பிடிப்பை தொடங்கி வைத்த ரஞ்சித்
Published on
‘பச்சை என்கிற காத்து’,  ‘மெர்லின்’ ஆகிய படங்களை இயக்கியவர் கீரா. இவர் அடுத்ததாக ‘பற’ என்ற படத்தை இயக்குகிறார். இப்படத்தை ‘கலிங்கா’ என்ற படத்தை தயாரித்த வர்ணாலயா சினி கிரியேஷன்ஸ் நிறுவனம் சார்பில் பெவின்ஸ் பால் மற்றும் ரிஷி கணேஷ் ஆகியோர் தயாரிக்கிறார்கள்.

இப்படத்தில் நித்திஷ் வீரா, சாந்தினி, வெண்பா, சாஜு மோன் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் நடிக்கிறார்கள். ஜார்ஜ் வி.ஜாய் இசையமைக்கும் இப்படத்திற்கு சிபின் சிவன் ஒளிப்பதிவு செய்கிறார். இப்படத்தின் முதல் நாள் படப்பிடிப்பை இயக்குனர் பா.ரஞ்சித் கலந்துக் கொண்டு ஆக்‌ஷன், கட் சொல்லி தொடங்கி வைத்தார்.

இப்படத்திற்கு பிக்பாஸ் புகழ் சினேகன் மற்றும் உமாதேவி பாடல் வரிகள் எழுதவுள்ளார்கள்.
X

Maalai Malar
www.maalaimalar.com