சினிமாக்காரனுக்கு மட்டுமே அரசியலில் ஈடுபட உரிமை இருக்கிறது: இயக்குனர் மோகன் ராஜா

சினிமாக்காரனுக்கு மட்டுமே அரசியலில் ஈடுபட உரிமை இருக்கிறது என வேலைக்காரன் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் இயக்குனர் மோகன் ராஜா பேசினார்.
Published on

சினிமாக்காரனுக்கு மட்டுமே அரசியலில் ஈடுபட உரிமை இருக்கிறது என வேலைக்காரன் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் இயக்குனர் மோகன் ராஜா பேசினார்.

நடிகர் சிவகார்த்திகேயன் - நயன்தாரா ஜோடியில் உருவாகியுள்ள படம் வேலைக்காரன். இந்தப் படத்தை மோகன் ராஜா இயக்க, அனிருத் இசையமைத்துள்ளார். இதில் மலையாள நடிகர் பகத் பாசில், பிரகாஷ்ராஜ், சிநேகா, ரோகிணி, ஆர்.ஜே.பாலாஜி, தம்பி ராமைய்யா, சதீஷ், ரோபோ சங்கர், விஜய் வசந்த் உள்பட பலரும் நடித்துள்ளனர். இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று தந்தி டி.வி.யில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்டது.

இந்த விழாவில் இயக்குனர் மோகன் ராஜா பேசியதாவது:

எனக்கு கிடைக்கும் அனைத்து பாராட்டுகளும் அப்பாவையே சேரும். ஆனால், இந்த படத்துக்கு கிடைக்கும் பாராட்டுகள் அனைத்தும் வேலைக்காரர்களுக்கே சேரும், எனக்கு கிடைக்கும் மரியாதை அனைத்து வேலைக்காரர்களுக்கும் கிடைக்கும் உழைப்பை மட்டுமே நம்பி வாழும் ஒவ்வொரு வேலைக்காரனுக்கும் இந்த படம் சமர்ப்பணம்.

மக்கள் மனதில் உள்ள உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் விதத்தில் அமைந்துள்ளது வேலைக்காரன். அனைவரின் ஆசிர்வாதத்தால் தொடர்ந்து பல படங்களை இயக்குவேன்.

சினிமாக்காரனுக்கு மட்டுமே அரசியலில் ஈடுபட உரிமை இருக்கிறது. எனவே அவர்களும் அரசியலில் ஈடுபடலாம்.
ஒவ்வொரு சினிமாக்காரனுக்கும் சமூக அக்கறை இருக்கிறது.

இவ்வாறு அவர் பேசினார்.

படத்தின் இசையமைப்பாளர் அனிருத் பேசுகையில், இது எனது 15-வது படம். கடந்த ஆறு வருடங்களில் நிறைய பயணங்கள் செய்துள்ளேன். இயக்குனர் ராஜா எனது வளர்ச்சியில் பக்கபலமாக உள்ளார். இந்த படத்தில் நடித்த அனைவரையும் பெருமைப்பட செய்தவர். நானும் எஸ்.கேவும் இணைந்து செய்துள்ள 5-வது படம். சிவகார்த்திகேயனின் வளர்ச்சி பெருமை அளிக்கிறது. வேலைக்காரன் படத்தில் நடித்த பிறகு, அவரால் எந்த கேரக்டரிலும் நடிக்க முடியும் என நினைக்கிறேன்
என்றார்.

இதில் நடித்த ஆர்.ஜே.பாலாஜி பேசுகையில் நான் ஒரு கார்ப்பரேட் நிறுவன நிகழ்ச்சிக்கு சென்றிருந்தேன். அப்போது அங்குள்ள 100 குழந்தைகளிடம் உங்களுக்கு பிடித்து நடிகர் யார்? என்று கேட்டபோது, 60-க்கும் மேற்பட்ட குழந்தைகள் மான்கராத்தே குறியீட்டை காட்டி சிவகார்த்திகேயன் என்று கூறினார்கள். அவருக்கு குழந்தைகள் ரசிகர்கள் அதிக அளவில் உள்ளனர். இந்த படத்தில் நடித்த பிறகு அவருடன் மிகவும் நெருக்கமான நட்பு ஏற்பட்டுள்ளது’’ என்றார்.

ஏழை சிறுவர்களுக்கு டியுஷன் எடுக்கும் ஒரு பெண்மணி, பீச்சில் மீன் சாப்பாடு கடை வைத்துள்ள சுந்தரி அக்கா, பீச்சில் மோர் விற்கும் மோர் தாத்தா, யா மொய்தின் பிரியாணி கடை உரிமையாளர், டிராபிக் போலீஸ், கிளிகளுக்கு உணவளிக்கும் பறவை மனிதர், ஆட்டோ டிரைவர் என மொத்தம் 7 பேரை தேர்வு செய்து கவுரவித்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com