மீண்டும் இயக்குனராக அவதாரம் எடுக்கும் தனுஷ்

பா.பாண்டி படத்தை அடுத்து தனுஷ் மீண்டும் படம் இயக்க இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
மீண்டும் இயக்குனராக அவதாரம் எடுக்கும் தனுஷ்
Published on

தனுஷ் தற்போது கவுதம் மேனன் இயக்கத்தில் ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ படத்திலும், வெற்றிமாறன் இயக்கத்தில் ‘வட சென்னை’ படத்திலும் நடித்து வருகிறார். இதில் எனை நோக்கி பாயும் தோட்டா படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

நடிகர், பாடகர், பாடலாசிரியர், தயாரிப்பாளர் என பல அவதாரங்களை எடுத்து வெற்றி கண்ட தனுஷ், ‘பா.பாண்டி’ படம் மூலம் இயக்குனராக அறிமுகமானார். ராஜ்கிரணை வைத்து வித்யாசமான கதையை இயக்கி வெளியான இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது. 

இந்த நிலையில் தனுஷ் மீண்டும் படம் இயக்க இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது. ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிப்பில் ஒரு புதிய படம் இயக்கப்போவதாகவும், அதில் தனுஷே நாயகனாகவும் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. விரைவில் இப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com