படை வீரனுக்கு குரல் கொடுத்த தனுஷ்

மணிரத்னம் உதவியாளர் இயக்கத்தில் விஜய் யேசுதாஸ் நடிப்பில் உருவாகி வரும் ‘படை வீரன்’ படத்திற்கு நடிகர் தனுஷ் குரல் கொடுத்துள்ளார்.
படை வீரனுக்கு குரல் கொடுத்த தனுஷ்
Published on
மணிரத்னம் உதவியாளர் தனா இயக்கியுள்ள படம் ‘படைவீரன்’. விஜய் யேசுதாஸ் கதாநாயகனாக நடித்திருக்கிறார். நாயகியாக அம்ரிதா நடித்துள்ளார். இயக்குனர் பாரதிராஜா, அனில் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

இந்த படத்துக்கு கார்த்திக்ராஜா இசை அமைத்திருக்கிறார். இந்த படத்தின் அனைத்து பணிகளும் முடிந்து விட்டது. சமீபத்தில் இதை தனுசுக்கு திரையிட்டு காட்டினார்கள். அப்போது இந்த படத்துக்காக அவர் ஒரு பாடல் பாட விரும்பினார். இதையடுத்து, மதுரை சூழல் அமைந்த பாடல் ஒன்றை தனுஷ் பாடி இருக்கிறார்.

கார்த்திக்ராஜா இசையில் தனுஷ் பாடிய இந்த பாடலை, ‘உத்தமபுத்திரன்’ படத்துக்கு பாடல் எழுதிய பிரியன் எழுதி இருக்கிறார்.
X

Maalai Malar
www.maalaimalar.com