குற்றாலத்தில் இருந்து படத்தை தொடங்கிய தனுஷ்

துரை செந்தில்குமார் இயக்கத்தில் தனுஷ் நடிக்க இருக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு குற்றாலத்தில் தொடங்கி இருக்கிறது. #Dhanush #Sneha
குற்றாலத்தில் இருந்து படத்தை தொடங்கிய தனுஷ்
Published on

விஸ்வாசம் படத்தின் வெற்றியை தொடர்ந்து சத்யஜோதி பிலிம்ஸ், அடுத்து தனுஷ் நாயகனாக நடிக்கும் "தயாரிப்பு எண் 34" என்ற தற்காலிக தலைப்பில் புதிய படத்தை உருவாக்கிக் கொண்டிருக்கிறது. தனுஷ் மற்றும் சினேகா நடிக்கும் முதல் கட்ட படப்பிடிப்பு குற்றாலத்தில் துவங்கியுள்ளது. தொடர்ந்து 30 நாட்கள் அங்கு படப்பிடிப்பு நடைபெற இருக்கிறது. 

கொடி படத்துக்கு பிறகு தனுஷ் மற்றும் இயக்குனர் துரை செந்தில்குமார் இரண்டாவது முறையாக இணைந்திருக்கிறார்கள். இது குறித்து துரை செந்தில்குமார் கூறும்போது, ‘கொடி படத்தின் வெற்றிக்கு பிறகு மீண்டும் தனுஷ் உடன் இணைந்து பணியாற்றுவதில் மகிழ்ச்சி அடைகிறேன். சத்யஜோதி பிலிம்ஸ் போன்ற ஒரு புகழ்பெற்ற தயாரிப்பு நிறுவனத்துடன் இணைந்து பணியாற்றுவதற்கான வாய்ப்பை நான் பெற்றிருப்பது எனக்கு கூடுதல் மகிழ்ச்சியை அளித்துள்ளது. மிகச்சிறந்த படத்தை வழங்கும் பொறுப்பு என் தோள்களில் உள்ளது என்பதை நான் உணர்கிறேன், அதை நிறைவேற்ற கடுமையாக உழைப்பேன்" என்றார்.

இப்படத்திற்கு ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவு செய்ய, இரட்டை இளம் இசையமைப்பாளர்கள் விவேக் - மெர்வின் இசையமைக்கிறார்கள். 

அடுத்து தனுஷ் மற்றும் ராட்சசன் புகழ் ராம்குமார் இணையும் "தயாரிப்பு எண் 35" படத்தையும் சத்யஜோதி நிறுவனம் தயாரிக்க இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com