பொய் தகவல்களை தடுக்க தீபிகா படுகோனே எடுக்கும் புதிய முயற்சி

பாலிவுட்டில் பிரபல நடிகையாக இருக்கும் தீபிகா படுகோனே, பொய் தகவல்களை தடுக்க இணையதளம் ஒன்றை தொடங்க இருக்கிறார். #DeepikaPadukone
பொய் தகவல்களை தடுக்க தீபிகா படுகோனே எடுக்கும் புதிய முயற்சி
Published on

ரன்வீர் சிங்கை திருமணம் செய்துகொண்ட தீபிகா படுகோனே தொடர்ந்து நடிக்க கதைகள் கேட்டு வருகிறார். ஆனால் சரியான கதைகள் அமையவில்லை. கணவர் ரன்வீர் சிங் நடிக்கும் 83 என்ற படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார்.

இது 1983 -ல் இந்திய கிரிக்கெட் அணி உலகக்கோப்பையை வென்ற நிகழ்வின் அடிப்படையில் அமைந்த கதை. கேப்டன் கபில்தேவ் வேடத்தில் ரன்வீர் நடிக்கிறார். திருமணமாகி விட்டதால் இனி முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடிப்பது என்பது அரிதான ஒன்று என்பதை புரிந்துகொண்ட தீபிகா, அடுத்த கட்டமாக தனக்காக தனி இணையதளம் ஒன்றை தொடங்க உள்ளார்.

தன்னைப் பற்றி நிறைய பொய் தகவல்கள் வருவதால் இந்த இணையதளத்தை தொடங்க உள்ளதாக கூறும் அவர் இதில் தன்னைப் பற்றிய முக்கிய தகவல்களை வெளியிட இருக்கிறார்.

X

Maalai Malar
www.maalaimalar.com