

ராஜபுத்திர ராணி பத்மாவதியின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து “பத்மாவத்” படம் தயாரிக்கப்பட்டது.
இதில் ராணி பத்மாவதியாக நடிகை தீபிகா படுகோனே நடித்து இருந்தார்.
இந்தி பட டைரக்டர் சஞ்சய் லீலா பன்சாலி இப்படத்தை இயக்கியுள்ளார். கடும் சர்ச்சைக்கு பிறகு இப்படம் வெளியாகி வசூல் மழை பெழிந்தது. ரூ.300 கோடிக்கும் மேல் வசூல் சாதனை படைத்துள்ளது.
பத்மாவத் படத்தில் ராணி பத்மாவதியாகவே தீபிகா படுகோனே வாழ்ந்து இருந்தார். இப்பட சூட்டிங்கின்போது அதிக எடையுள்ள நகைகள் மற்றும் உடைகளை அணிந்து நடித்தார்.
இதனால் அவருக்கு அப்போதே முதுகு வலி ஏற்பட்டது. இருந்தாலும் அதை பொருட்படுத்தாமல் மருந்து மாத்திரைகளை சாப்பிட்டு தொடர்ந்து நடித்து முடித்தார். தற்போது பத்மாவத் படம் மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ளது.
அந்த மகிழ்ச்சியில் திளைத்து இருக்கும் அவரால் தொடர்ந்து வேறு படங்களில் நடிக்க முடியவில்லை. படப்பிடிப்பின்போது ஏற்பட்ட முதுகு வலி தற்போதும் அவரை தொடர்ந்து வாட்டி வதைக்கிறது.
அதற்காக அவர் டாக்டரிடம் சென்று சிகிச்சை பெற்றார். படப்பிடிப்பிற்கு செல்லாமல் தொடர்ந்து வீட்டில் ஓய்வு எடுக்கும்படி டாக்டர்கள் அவருக்கு அறிவுரை வழங்கியுள்ளனர்.
எனவே அவர் வீட்டில் ஓய்வு எடுத்து வருகிறார். தாயார் உஜ்ஜாலா உடன் இருந்து அவரை கவனித்து வருகிறார். முதுகு வலி இருப்பதால் உயரமான ‘ஹீல்ஸ்’ அதாவது குதிகால் செருப்புகளை அணியக்கூடாது என டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். அதன்படியே தீபிகா படுகோனே சாதாரண செருப்புகளையே அணிகிறார். முதுகு வலியால் அவதிப்படும் அவர் இன்னும் ஒரு மாதத்துக்கு பட சூட்டிங்கில் கலந்து கொள்ள முடியாத நிலை உள்ளது. மேலும் பல பொது விழாக்கள், பேஷன் ஷோ உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் அவரால் பங்கேற்க முடியாத நிலை உள்ளது. #Padmaavat #DeepikaPadukone