பங்களாவை விட்டு வெளியேறுமாறு நடிகர் திலீப்குமாருக்கு கட்டிட காண்டிராக்டர் மிரட்டல்

பங்களாவை விட்டு வெளியேறுமாறு நடிகர் திலீப்குமார், சாய்ரா பானுவுக்கு கட்டிட காண்டிராக்டர் மிரட்டல் விடுப்பதாக போலீசாரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
பங்களாவை விட்டு வெளியேறுமாறு நடிகர் திலீப்குமாருக்கு கட்டிட காண்டிராக்டர் மிரட்டல்
Published on

பழம்பெரும் இந்தி நடிகர் திலீப் குமார்.

உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட அவருக்கு சமீபத்தில் தான் 95 வயது பிறந்தது. அவர் மும்பை பாந்த்ரா பகுதியில் மனைவி சாய்ரா பானுவுடன் வசித்து வருகிறார்.

இந்த நிலையில் திலீப் குமார் குடும்பத்துக்கும், கட்டிடம் கட்டும் நிறுவனத்துக்கும் இடையே சொத்து வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நடந்தது. கோர்ட்டு உத்தரவு திலீப்குமாருக்கு சாதகமாக வந்தது. கடந்த செப்டம்பர் மாதம் அவருக்கு பாந்தராவில் உள்ள பாலி பங்களா கிடைத்தது.

இந்த நிலையில் கட்டிட காண்டிராக்டர் சமீர் போஜ்வானி பங்களாவை விட்டு வெளியேறுமாறு திலீப்குமாருக்கும், அவரது மனைவிக்கும் மிரட்டல் விடுத்துள்ளார்.

இது தொடர்பாக சாய்ரா பானு மராட்டிய முதல் - மந்திரி பட்னாவிசுக்கு புகார் கடிதம் அனுப்பி உள்ளார். அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-

போலி ஆவணங்கள் மூலம் கட்டிட காண்டிராக்டர் போஜ்வானி, திலீப் குமாரையும், என்னையும் பங்களாவை விட்டு வெளியேறுமாறு மிரட்டுகிறார். என் கணவருக்கு 95 வயதும், எனக்கு 74 வயதும் ஆகிறது. வயதான எங்களை அவர் தேவையில்லாமல் தொந்தரவு செய்கிறார். சட்டத்துக்கு புறம்பாக அழுத்தம் கொடுத்து எங்களை மிரட்டுகிறார். எங்களுக்கு பாதுகாப்பு கொடுங்கள்.

இவ்வாறு அந்த கடிதத்தில் கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com