ஸ்ரீரெட்டி மீது சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார்

பாலியல் புகார் கூறி பரபரப்பை ஏற்படுத்தும் நடிகை ஸ்ரீரெட்டி மீது சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. #SriReddy
ஸ்ரீரெட்டி மீது சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார்
Published on

தெலுங்கு சினிமா உலகில் படவாய்ப்புக்காக நடிகைகளுக்கு பாலியல் தொல்லை கொடுப்பதாக புகார் கூறி அரை நிர்வாணப் போராட்டத்தில் ஈடுபட்ட நடிகை ஸ்ரீ ரெட்டி முன்னணி இயக்குனர் முருகதாஸ், நடிகர்கள் ராகவா லாரன்ஸ், ஸ்ரீகாந்த் உள்ளிட்டோர் மீது புகார் கூறி இருந்தார்.

சென்னையில் தங்கி இருக்கும் அவர் டைரக்டர் சுந்தர்.சி, நடிகர் ஆதி ஆகியோர் மீதும் புகார்களை கூறி உள்ளார்.

இந்த நிலையில் ஸ்ரீரெட்டி மீது நடிகர் வாராகி சென்னை போலீஸ் கமி‌ஷனர் அலுவலகத்தில் இன்று புகார் மனு ஒன்றை அளித்தார். அதில் கூறி இருப்பதாவது:-

நடிகை ஸ்ரீரெட்டி, ஆந்திராவில் பிரபலங்கள் மீது பாலியல் புகார் அளித்து பணம் பறித்துள்ளார். சென்னையில் அது போன்று திரை உலகை சேர்ந்தவர்களை மிரட்டி பணம் பறிக்க முயற்சிக்கிறார்.

பாலியல் புகாருக்கு ஆதாரம் இருக்கிறதா என்கிற கேள்விக்கு அவர் அளித்துள்ள பதில் பெண்களை இழிவுபடுத்துவது போல் உள்ளது. அவரது பேட்டி விபச்சாரத்தை ஒப்புக் கொண்டது போல் உள்ளது. எனவே விபச்சார சட்ட பிரிவின் கீழ் ஸ்ரீரெட்டி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com