தினேஷை சுற்றி வளைத்த கமாண்டோ படை வீரர்கள்

இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு படத்தின் படப்பிடிப்பு தளத்தில் கமாண்டோ படை வீரர்கள் சுற்றி வளைத்திருக்கிறார்கள். #Dinesh #Gundu
தினேஷை சுற்றி வளைத்த கமாண்டோ படை வீரர்கள்
Published on

நடிகர் தினேஷ் நடிக்கும் "இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு" படத்தின் படப்பிடிப்பு சென்னை மற்றும் புற நகர் பகுதிகளில் நடைபெற்று வருகிறது. இயக்குனர் பா.இரஞ்சித்தின் உதவியாளர் அதியன் ஆதிரை இயக்கும் இந்த படத்தில் தினேஷ், ஆனந்தி, ரித்விகா, ராம்தாஸ், லிங்கேஷ், ஜான்விஜய், ஜானிஹரி, வினோத் உள்ளிட்டவர்கள் நடித்து வருகிறார்கள். நீலம் புரொடக்சன் சார்பில் பா.இரஞ்சித் தயாரிக்கிறார். கிஷோர் ஒளிப்பதிவு செய்கிறார்.

இந்த படத்தின் ஆக்‌ஷன் காட்சிகளை சண்டைப்பயிற்சியாளர் சாம், மற்றும் இயக்குனர் அதியன் ஆதிரை சென்னை புற நகர் தேசிய நெடுஞ்சாலையில் இரவில் எடுத்துகொண்டிருந்தனர். 

நாயகன் தினேஷ், வேகமாக செல்லும் லாரியில் தொங்கிக்கொண்டு சண்டைபோடும் காட்சியை படக்குழுவினர் படமாக்கிக் கொண்டிருந்தனர். கேமரா லாரிக்குள் இருந்ததால் ரோட்டில் செல்வோருக்கு நிஜமாக ஏதோ லாரியில் நடக்கிறது என்பது போன்ற தோற்றத்தை கொடுத்திருக்கிறது. அதே நேரத்தில் அந்த வழியே வந்த ஸ்பெஷல் கமாண்டோ படை வீரர்கள் நிஜமாகவே லாரியில் இரவு நேரத்தில் ஏதோ நடக்கிறது என்று லாரியை சுற்றி வளைத்துப் பிடித்தனர். 

இதை அறிந்திராத தினேஷ், 'நமக்குத்தெரியாமல் இது என்ன புதுசா கமாண்டோ வீரர்கள் எல்லாம் சீன்ல வராங்களே' இது சீன்லயே இல்லையே என்று அதிர்ச்சியடையாமல் சுற்றி வளைத்த போலீசார் வைத்திருந்த துப்பாக்கிகளை பார்த்து இது என்ன ஒரிஜினல் மாதிரியே இருக்கு? என்று கேட்க.... நிஜ போலீசார் துப்பாக்கியை தினேஷ் மீது குறிவைக்க, இயக்குனர் சூட்டிங், சூட்டிங், என்று சத்தம்போட அதற்குபிறகே தினேஷ் அதிர்சியடைந்திருக்கிறார். நெருங்கி வந்த வீரர்கள் தினேஷ் முகத்தை கவனித்தபிறகே நிஜமான சூட்டிங் என்று உறுதிபடுத்தியுள்ளனர். 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com