யஷ் நடித்துள்ள டாக்சிக் திரைப்படத்தின் டிரெய்லர் வெளியானது - போதைப்பொருள் மாஃபியா பின்னணியில் கதைக்களம்

கதை பின்னணியில் அதிரடி ஆக்ஷன், காதல் மற்றும் கேங்ஸ்டர் பின்னணி காட்சிகள் இடம்பெற்றுள்ளன.
Yash’s Toxic Trailer
யஷ் ஆக்ஷன் கம்பேக்: கோவா போதைப்பொருள் மாஃபியா பின்னணியில் கேங்ஸ்டர் காதல் கதை
Published on: 

யஷ் நடிக்கும் ‘டாக்சிக்’ திரைப்படத்தின் டிரெய்லரை இன்று தயாரிப்பு நிறுவனம் இணையத்தில் வெளியிட்டுள்ளது. இயக்குனர் கீது மோகன்தாஸ் உருவாக்கியுள்ள இந்த படம், ரசிகர்களிடையே மிகவும் எதிர்பார்க்கப்படும் ஆக்ஷன் படங்களில் ஒன்றாக உள்ளது.

கே.ஜி.எஃப் தொடரின் வெற்றிக்குப் பிறகு, யஷ் நடித்துள்ள டாக்சிக் திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்புகள் அதிகமாக உள்ளன. கதை பின்னணியில் அதிரடி ஆக்ஷன், காதல் மற்றும் கேங்ஸ்டர் பின்னணி காட்சிகள் இடம்பெற்றுள்ளன.

கீது மோகன்தாஸ் இயக்கிய 'டாக்சிக்' திரைப்படத்தில், யஷ் உடன் இணைந்து முக்கிய கதாபாத்திரத்தில் நயன்தாரா, கியாரா அத்வானி, ருக்மிணி வசந்த், ஹுமா குரேஷி உள்ளிட்ட நட்சத்திரங்கள் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

டாக்சிக் கதைக்களம்

இந்த கேங்ஸ்டர் படம், 1940 மற்றும் 1970க்கு இடைப்பட்ட காலத்தில் கோவாவின் போதைப்பொருள் வர்த்தகம் மற்றும் மாஃபியா வலைய மைப்புகளின் பின்னணியில் அமைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

கே.ஜி.எஃப் படத்திற்குப் பிறகு யஷ் மற்றொரு ஆக்‌ஷன் கதாபாத்திரத்தில் நடித்திருப்பதால், ரசிகர்களிடையே பெரும் கவனத்தை பெற்றுள்ளது.

இந்த டாக்சிக் டிரெய்லரில் காதல் மற்றும் பிரம்மாண்டமான சண்டைக் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. இது யஷ்-இன் முந்தைய படங்களிலிருந்து முற்றிலும் மாறுபட்ட சினிமா அனுபவத்தை வழங்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த மாத இறுதியில்(26ஆம் தேதி) டாக்சிக் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com