மும்பையில் ரூ.30 கோடிக்கு நிலம் வாங்கிய யாஷ்

‘ராமாயணா’ படத்தை தொடர்ந்து சில இந்தி படங்களில் நடிக்க யாஷ் கதைகள் கேட்டுள்ளாராம்.
மும்பையில் ரூ.30 கோடிக்கு நிலம் வாங்கிய யாஷ்
Published on

கன்னட சினிமாவிலேயே முடங்கி கிடந்த நடிகர் யாஷ். 'கே.ஜி.எப்.' படத்தின் மூலம் விஸ்வரூபம் எடுத்து இந்திய அளவில் கவனிக்கப்படும் நடிகரானார்.

தற்போது கீது மோகன்தாஸ் இயக்கத்தில் 'டாக்ஸிக்' படத்தில் நடித்துள்ளார். 'ராமாயணா' படத்தில் ராவணனாக நடிக்கிறார். ‘ராமாயணா’ படத்தை தொடர்ந்து சில இந்தி படங்களில் நடிக்க யாஷ் கதைகள் கேட்டுள்ளாராம். இதையடுத்து மும்பை அருகேயுள்ள அலிபாக் கடலோர பகுதியில் ரூ.30 கோடி மதிப்பில் நிலத்தை வாங்கியிருக்கிறார். இந்த நிலத்தில் ஒரு சொகுசு வீடும் உள்ளடங்கி இருக்கிறதாம்.

இந்த சொத்து நடிகர் யாஷ் மற்றும் அவரது மனைவி ராதிகா பண்டிட் பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. பாலிவுட் சினிமாவில் தனது பார்வையை செலுத்தி வரும் நிலையில், யாஷின் இந்த முதலீடு திரையுலல் பேசுபொருளாக மாறியுள்ளது.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com