ஆனந்த் அம்பானி திருமணத்தில் கலந்து கொள்ளாதது ஏன்? உண்மையை உடைத்த டாப்ஸி

ஐஸ்வர்யா ராய், பிரியங்கா சோப்ரா, தமன்னா என நடிகைகள் பலரும் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.அதனால் தான் ஆனந்த் அம்பானி திருமணத்துக்கு செல்லவில்லை என்று தெரிவித்துள்ளார்.
ஆனந்த் அம்பானி திருமணத்தில் கலந்து கொள்ளாதது ஏன்? உண்மையை உடைத்த டாப்ஸி
Published on

ஆசியாவின் பெரும் பணக்காரர்முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆன்ந்த அம்பானிக்கு ராதிகா மெர்ச்செண்டுடன் கோலாகலமாக திருமணம் நடந்த முடிந்திருக்கிறது. மும்பையில் நடைபெற்றது. கடந்த 1½ ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நிச்சயிக்கப்பட்டது.

திருமணத்துக்கு முந்தைய வைபவங்களும், கொண்டாட்டங்களும் கடந்த சில மாதங்களாகவே நடந்து வந்தது. மும்பை பி.கே.சி.யில் உள்ள அம்பானி குடும்பத்துக்கு சொந்தமான ஜியோ வேர்ல்டு டிரைவ் கன்வென்சன் அரங்கில் கடந்த ஜூலை 12 ஆம் தேதி நடந்த ஆனந்த் அம்பானி - ராதிகா மெர்ச்சன்ட் திருமண விழாவில் நடிகர் ரஜினிகாந்த், கிரிக்கெட் வீரர் டோனி, ஹாலிவுட் நடிகர் ஜான் சீனா, ஷாருக்கான், சல்மான் கான் என கிட்டத்தட்ட ஒட்டுமொத்த இந்தியத் திரையுலகமே கலந்து கொண்டது. ஐஸ்வர்யா ராய், பிரியங்கா சோப்ரா, தமன்னா என நடிகைகள் பலரும் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.

இந்நிலையில் ஆடுகளம் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு அறிமுகமாகி முன்னணி பாலிவுட் நடிகையாக வளம் வரும் டாப்ஸி தான் ஏன் இந்த திருமண நிகழ்வில் கலந்துகொள்ளவில்லை என்று மனம் திறந்துள்ளார்.

அவர் கூறியதாவது, எனக்கு அவர்களை தனிப்பட்ட முறையில் தெரியாது; திருமணம் என்பது தனிப்பட்ட விசயம் என நினைக்கிறேன்; எனக்கு அல்லது எனது குடும்பத்துக்கும் சிறியதாவது பழக்கமிருந்தால் மட்டுமே நான் பெரும்பாலும் திருமண நிகழ்வுகளில் கலந்து கொள்வேன்; அதனால் தான் ஆனந்த் அம்பானி திருமணத்துக்கு செல்லவில்லை என்று தெரிவித்துள்ளார்.

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

X

Maalai Malar
www.maalaimalar.com