ஆக. 2-ல் ‘விஸ்வநாத் & சன்ஸ்’ படத்தின் இசை வெளியீட்டு விழா

ராதிகா சரத்குமார் மற்றும் ரவீனா தாண்டன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார்.
விஸ்வநாத் & சன்ஸ் படத்தின் பாடல் காட்சி.
விஸ்வநாத் & சன்ஸ் படத்தின் பாடல் காட்சி.
Published on

‘விஸ்வநாத் & சன்ஸ்’ படம் ஆகஸ்ட் மாதம் 14-ந்தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. படம் வெளியாக உள்ளதை தொடர்ந்து இப்படத்தின் பாடல்கள் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை பெற்றது.

விஸ்வநாத் & சன்ஸ்

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் சூர்யா. இவர் ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் நடித்துள்ள 45-வது படமான ‘கருப்பு’ வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்று வசூல் குவித்தது.

இதனை தொடர்ந்து, வெங்கி அட்லூரி இயக்கத்தில் நடிகர் சூர்யா தனது 46-வது படத்தில் நடித்து முடித்துள்ளார். ‘விஸ்வநாத் & சன்ஸ்’ என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தின் கதாநாயகியாக மமிதா பைஜூ நடித்துள்ளார். மேலும், ராதிகா சரத்குமார் மற்றும் ரவீனா தாண்டன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

பாடல்கள்

இதற்கிடையே ‘விஸ்வநாத் & சன்ஸ்’ படம் ஆகஸ்ட் மாதம் 14-ந்தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. படம் வெளியாக உள்ளதை தொடர்ந்து இப்படத்தின் பாடல்கள் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை பெற்றது.

இதனிடையே நடிகர் சூர்யா பிறந்தநாளையொட்டி கடந்த வாரம் வெளியான இரண்டாவது பாடலும் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது. இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் குமார் இசையில் உருவாகியுள்ள இப்பாடலை, நடிகர் சூர்யாவே தனது சொந்தக் குரலில் பாடியுள்ளார். மேலும் கென் கருணாஸ் வரிகளில் உருவாகியுள்ள இப்பாடல், ஒரு குடும்பத் திருமண விழாவின் கொண்டாட்டங்களை மையமாகக் கொண்டு துள்ளலான இசையுடன் பின்னப்பட்டுள்ளது.

இசை வெளியீட்டு விழா

இந்த நிலையில், சூர்யாவின் 'விஸ்வநாதன் & சன்ஸ்' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா, ஆகஸ்ட் 2-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று நேரு ஸ்டேடியத்தில் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com