சூர்யா குரலில் 'விஸ்வநாத் & சன்ஸ்' பாடல்.. இன்று ப்ரோமோ!

ராதிகா சரத்குமார் மற்றும் ரவீனா தாண்டன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார்.
சூர்யா
சூர்யா
Published on

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சூர்யா இன்று தனது 51-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு திரைப்பிரபலங்கள், ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

விஸ்வநாத் & சன்ஸ்

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் சூர்யா. இவர் ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் நடித்துள்ள 45-வது படமான ‘கருப்பு’ வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்று வசூல் குவித்தது.

இதனை தொடர்ந்து, வெங்கி அட்லூரி இயக்கத்தில் நடிகர் சூர்யா தனது 46-வது படத்தில் நடித்து முடித்துள்ளார். ‘விஸ்வநாத் & சன்ஸ்’ என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தின் கதாநாயகியாக மமிதா பைஜூ நடித்துள்ளார். மேலும், ராதிகா சரத்குமார் மற்றும் ரவீனா தாண்டன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

இதற்கிடையே ‘விஸ்வநாத் & சன்ஸ்’ படம் ஆகஸ்ட் மாதம் 14-ந்தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. படம் வெளியாக உள்ளதை தொடர்ந்து இப்படத்தின் முதல் பாடல் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை பெற்றது.

ப்ரோமோ

இந்த நிலையில், ‘விஸ்வநாத் & சன்ஸ்’ படத்தின் இரண்டாம் பாடல் நடிகர் சூர்யாவின் பிறந்தநாளான இன்று வெளியாகும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் பாடல் இன்று வெளியாகாதது இன்றும் பாடலின் ப்ரோமோ மட்டும் இன்று வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

‘விஸ்வநாத் & சன்ஸ்’ படத்தின் இரண்டாம் பாடல் நாளை மறுநாள் வெளியாகும் என்றும் இப்பாடலில் நடிகர் சூர்யாவின் குரல் இடம்பெற்றிருப்பதாக கூறப்பட்டுள்ளது. இதனால் இப்பாடல் மீதான ஆர்வம் ஏற்பட்டுள்ளது.

பிறந்தநாள்

இதனிடையே, தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சூர்யா இன்று தனது 51-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு திரைப்பிரபலங்கள், ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com