‘Vaama Vaama...’ தனுஷ் குரலில் 'இதயம் முரளி' பாடல் வெளியீட்டு அறிவிப்பு

இப்படம் அடுத்த மாதம் 10-ந்தேதி உலக முழுவதும் உள்ள திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
‘Vaama Vaama...’ தனுஷ் குரலில் 'இதயம் முரளி'  பாடல் வெளியீட்டு அறிவிப்பு
Published on

Dawn Pictures தயாரிப்பு நிறுவனத்தின் சார்பில் 4-வது படமாக, தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் இயக்கத்தில் அதர்வா முரளி நடித்துள்ள படம் "இதயம் முரளி". இப்படத்தின் டைட்டில் மற்றும் டீசர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு பெற்றுள்ளது.

தமிழ் சினிமாவில் மறைந்தநடிகர் முரளியின் மறக்கமுடியாத பாத்திரம் இதயம் முரளி, அவரது மகன் அதர்வா நடித்துள்ள இதயம் முரளி படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்ப்பார்ப்பு நிலவி வருகிறது.

இப்படத்தில் அதர்வாவுடன் தமன் எஸ், ப்ரீத்தி முகுந்தன், கயாடு லோஹர் மற்றும் நிஹாரிகா முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். முழுக்க முழுக்க இளைஞர்கள் கொண்டாடும், ரொமான்ஸ் திரைப்படமாக இதயம் முரளி எடுக்கப்பட்டுள்ளது. இப்படம் அடுத்த மாதம் 10-ந்தேதி உலக முழுவதும் உள்ள திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

இந்த நிலையில், 'இதயம் முரளி' படத்தின் ‘வாமா வாமா’ பாடல் நாளை வெளியாகிறது. இப்பாடலை தமன் இசையில் நடிகர் தனுஷ் பாடியுள்ளார். இதுதொடர்பாக ப்ரோமோ வீடியோவை தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது. இதனால் ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்தில் உள்ளனர்.

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக இருக்கும் தனுஷ், ஒரு சிறந்த பின்னணிப் பாடகராகவும் பல சூப்பர்ஹிட் பாடல்களைப் பாடியுள்ளார். அவரது தனித்துவமான குரலில் வெளியாகி, ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளன. குறிப்பாக, 'Why This Kolaveri Di', 'Rowdy Baby' உள்ளிட்ட பாடல்கள் சர்வதேச அளவில் பிரபலமானவை. லோக்கல், மெலடி மற்றும் காதல் பாடல்கள் என பல்வேறு பாடல்களை நடிகர் தனுஷ் பாடியுள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com