மகளுடன் இணைந்து நடிக்கும் ஊர்வசி

நீண்ட நாட்களுக்கு பிறகு கன்னட திரை உலகிற்கு திரும்பியுள்ள ஊர்வசி இப்படத்தில் கதாநாயகன் புவன் தாயார் கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
மகளுடன் நடிகை ஊர்வசி
மகளுடன் நடிகை ஊர்வசி
Published on: 

என் மகள் தேஜா இந்த படத்தின் மூலம் தனது கன்னட திரைப்பட பயணத்தை தொடங்குவது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது.

நடிகை ஊர்வசி

தென்னிந்திய திரை உலகில் ஒரு காலகட்டத்தில் கதாநாயகியாக ஏராளமான படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தவர் ஊர்வசி. தற்போது குணச்சித்திர பாத்திரங்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் ஊர்வசியின் மகள் தேஜா லட்சுமியும் திரையுலகில் அறிமுகமாகி இருக்கிறார். சுந்தரியாயவள் ஸ்டெல்லா என்ற மலையாள படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகியுள்ள தேஜா லட்சுமி தற்போது கன்னட திரை உலகிலும் தடம் பதித்து கதாநாயகியாக புதிய படமொன்றில் நடிக்கிறார். புல்லி என்ற டார்க் காமெடி படத்தில் புவன் பொன்னண்ணாவுக்கு ஜோடியாக முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

மேலும் ஒரு ஹைலைட்டான விஷயம் என்னவெனில் ஊர்வசியும் இந்த படத்தில் நடிக்கிறார். நீண்ட நாட்களுக்கு பிறகு கன்னட திரை உலகிற்கு திரும்பியுள்ள ஊர்வசி இப்படத்தில் கதாநாயகன் புவன் தாயார் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். தாயும் மகளும் முதல் முறையாக இணைந்து நடிக்கும் முதல் படம் இதுவாகும்.

இது குறித்து ஊர்வசி கூறியதாவது:-

என் மகள் தேஜா இந்த படத்தின் மூலம் தனது கன்னட திரைப்பட பயணத்தை தொடங்குவது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. புவனும் படக்குழுவினரும் கதை சொல்வதற்காக சென்னை வந்தபோது நான் உடனடியாக படத்தோடு ஒன்றிவிட்டேன். இந்த படத்தில் நான் நடித்திருக்கவில்லை என்றால் ஒரு அற்புதமான வாய்ப்பை இழந்திருப்பேன் என்றார்.

X

Maalai Malar
www.maalaimalar.com