உதயநிதி கைது - நடிகை நிவேதா பெத்துராஜின் திடீர் எக்ஸ் பதிவு!

பிறர் இல்லாத போது அவரைப் புறங்கூறி, நேரில் முகத்திற்குப் புகழ்ந்து பொய்யாக வாழ்வதை விட இறந்து விடுவது மேல்.
Nivetha Pethuraj
Nivetha Pethuraj
Published on

தஞ்சையில் நடந்த காவிரி விவகாரம் தொடர்பான ஆர்ப்பாட்டத்தில் பிரபல நடிகை குறித்து அவதூறாகப் பேசிய வழக்கில், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும் திமுக முக்கிய நிர்வாகியுமான உதயநிதி ஸ்டாலின் காவல்துறையினரால் இன்று அதிரடியாகக் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த அரசியல் பரப்பரப்புக்கு இடையே, தமிழ் சினிமா நடிகை நிவேதா பெத்துராஜ் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ள ஒரு திருக்குறள் பதிவு, தற்போது இணையத்தில் மிகப்பெரிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

கைதுக்கான பின்னணி என்ன?

தஞ்சாவூரில் திமுக நடத்திய கண்டன ஆர்ப்பாட்டத்தில் உதயநிதி ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது கூட்டத்தில் இருந்த சிலர் நடிகையின் பெயரை முழக்கமிட்டனர். அதற்குப் பதிலளிக்கும் விதமாக, உதயநிதி ஸ்டாலின் இரட்டை அர்த்தத்தில் சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாகக் கூறப்படுகிறது.

இது பெண் வன்கொடுமை மற்றும் பெண்களை இழிவுபடுத்தும் செயல் என தவெக தரப்பில் கடும் எதிர்ப்புகள் கிளம்பின. இதனைத் தொடர்ந்து, அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டார்

நிவேதா பெத்துராஜ் பகிர்ந்த திருக்குறள்:

நடிகை நிவேதா பெத்துராஜ் தனது எக்ஸ் பக்கத்தில்,

'புறங்கூறிப் பொய்த்துயிர் வாழ்தலின் சாதல்

அறங்கூற்றும் ஆக்கம் தரும்.'

என்ற புறங்கூறாமை அதிகாரத்தில் உள்ள 183-வது திருக்குறளை பதிவிட்டுள்ளார்.

இதன் அர்த்தம் என்ன?

“பிறர் இல்லாத போது அவரைப் புறங்கூறி, நேரில் முகத்திற்குப் புகழ்ந்து பொய்யாக வாழ்வதை விட இறந்து விடுவது மேல்" என்று பொருளாகும்.

X

Maalai Malar
www.maalaimalar.com