கைவசம் மூன்று படங்கள்... ஹீரோவாக அறிமுகம் - அஸ்வத் மாரிமுத்து படு பிஸி

அஸ்வத் கதாநாயகனாக அறிமுகமாகும் படத்தையும் பிரதீப் தான் தயாரிக்கவுள்ளார் என்ற தகவலும் சினிமா வட்டாரத்தில் உலா வருகிறது.
கைவசம் மூன்று படங்கள்... ஹீரோவாக அறிமுகம் - அஸ்வத் மாரிமுத்து படு பிஸி
Published on

தமிழில் ‘டிராகன்’ மற்றும் ‘ஓ மை கடவுளே’ ஆகிய படங்களை இயக்கி தனக்கென அடித்தளத்தை உருவாக்கியவர் அஸ்வத் மாரிமுத்து. இவர் தற்போது நடிகர் ரஜினிகாந்தின் ‘தலைவர் 173’ மற்றும் சிம்புவின் 'STR51' ஆகிய படங்களை இயக்க உள்ளார். இதற்கான தனது பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறார்.

இதற்கிடையே, பிரதீப் ரங்கநாதன் தயாரிப்பில் மமிதா பைஜூ நடிப்பில் உருவாகும் பெண்கள் மையத்திலான ஒரு திரைப்படத்தில், முக்கியக் காவல் அதிகாரி கதாபாத்திரத்தில் ஒரு குறிப்பிடத்தக்க சிறப்பு கதாபாத்திரத்தில் அஸ்வத் மாரிமுத்து நடித்து வருகிறார்.

மேலும், அஸ்வத் கதாநாயகனாக அறிமுகமாகும் படத்தையும் பிரதீப் தான் தயாரிக்கவுள்ளார் என்ற தகவலும் சினிமா வட்டாரத்தில் உலா வருகிறது. அதைத் தொடர்ந்து, தனது நண்பர்களான சில இயக்குநர்களின் படங்களிலும் நடிக்க அஸ்வத் மாரிமுத்து திட்டமிட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com